News June 26, 2024

கெஜ்ரிவாலுக்கு உடல் நலக்குறைவு

image

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று காலை டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை சிபிஐ கைது செய்தது. அப்போது, அவரது ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்ததால் நீதிமன்ற அறையில் இருந்து வெளியே அழைத்து வரப்பட்டார். காவலர்கள் அவருக்கு டீயும் பிஸ்கெட்டும் கொடுத்து பெஞ்சில் அமர வைத்தனர்.

Similar News

News August 24, 2025

‘கூலி’ படம் புதிய சாதனை.. இவ்வளவு கோடியா..!

image

கூலி படம் வசூல் ரீதியாக பல சாதனைகளை படைத்து வருகிறது. வட அமெரிக்காவில் அதிக வசூலை ஈட்டிய தமிழ் படம் என்ற சாதனையை படைத்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. அங்கு மட்டும் சுமார் ₹60 கோடி வசூலாகியுள்ளதாக போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, உலகம் முழுவதும் இப்படம் ₹500 கோடி வரை கலெக்‌ஷனாகி இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நீங்க படம் பார்த்துட்டீங்களா?

News August 24, 2025

1 பைசா செலவு இல்லாம 1 வருஷம் ஊர் சுத்தணுமா?

image

விசா, தங்கும் இடம், உணவு என ஒரு செலவும் இல்லாமல் 4 கண்டங்களை சுற்றி பார்க்கவேண்டுமா? 1 வருடத்திற்கான Free Travel ஸ்கீமை அறிமுகப்படுத்தியுள்ளது Scapia எனும் நிறுவனம். இதற்கு விண்ணப்பிக்க, பயணத்தின் முக்கியத்துவம் பற்றி ஒரு வீடியோ தயாரித்து, அதனை <>scapia.cards/leapyear<<>> Website-ல் ஆக.31-க்குள் பதிவேற்ற வேண்டும். வெற்றிபெறும் 2 பேருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 24, 2025

ரேஷன் கார்டுக்கு ₹5,000.. தமிழக அரசு திட்டம்!

image

இந்தாண்டு பொங்கல் பரிசுத் தொகை வழங்காததால் திமுக அரசு மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், 2026 பொங்கலுக்கு ரேஷன் கார்டுக்கு ₹5,000 வழங்க அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் பரவியது. இதனை உறுதி செய்யும் விதமாக, நிதி ஆதாரத்தை தயார் செய்ய நிதித்துறையிடம் அரசு அறிவுறுத்தியுள்ளதாக தலைமை செயலக வட்டாரங்கள் தற்போது தெரிவிக்கின்றன. இதுகுறித்த அறிவிப்பை CM ஸ்டாலின் வெளியிட உள்ளாராம்.

error: Content is protected !!