News June 26, 2024
ஆஃப்கன் வீரருக்கு டீமெரிட் புள்ளி?

BAN-க்கு எதிரான T20 WC போட்டியில், AFG வீரர் குல்பதின் நைப்பிற்கு தசைப் பிடிப்பு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. போட்டியை தாமதிக்கும் நோக்கில் அவர் வேண்டுமென்றே நடித்திருந்தால், ICC விதிகளின்படி, AFG அணிக்கு 100% அபராதமும், அவருக்கு 2 டீமெரிட் புள்ளிகளும் அளிக்கப்படலாம். ஓராண்டில் ஒரு வீரர் 4 டீமெரிட் புள்ளிகளைப் பெற்றால், அவர் 1 டெஸ்ட் போட்டி அல்லது 2 ODI/T20 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படும்.
Similar News
News March 11, 2026
ஈரானின் கண்ணிவெடியால் டிரம்ப் ஆவேசம்!

<<19350594>>ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகள் <<>>வைக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை அடுத்து ஈரானுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் கடற்படை கண்ணிவெடிகளை வைத்திருந்தால், அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும்; இல்லையெனில், இதற்கு முன் கண்டிராத அளவில் இராணுவ நடவடிக்கை இருக்கும் என்று கூறியுள்ளார். அந்த கண்ணிவெடிகளை அகற்றினால், ஈரான் சரியான திசையில் நகரும் எனவும் தெரிவித்துள்ளார்.
News March 11, 2026
கண்ணாயிரம் அந்த சமையல் Weapons எடு..

இன்றைய தலைமுறை தம்பதிகள் பலரிடம், ஏனோ வீட்டில் சமைக்கும் ஆர்வம் சற்று குறைவாகவே உள்ளது. எதற்கெடுத்தாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் அவர்கள் தற்போது, ஹோட்டல்கள் மூடப்படுவதால் வீட்டில் சமைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதை சோதனைக் காலமாக தம்பதிகள் கருதினாலும், ஆர்டர் செய்வதை நிறுத்திவிட்டதால் இம்மாதம் ஆயிரக்கணக்கில் மிச்சமாகும் என வீட்டுப் பெரியவர்கள் கூறுகின்றனர்.
News March 11, 2026
CINEMA 360°: ஒரே படத்தில் இணையும் ரஜினி – ஷாருக்

*சாய் பல்லவியின் ‘ஏக் தின்’ பாலிவுட் பட டிரெய்லர் இன்று வெளியாகிறது. *ஆந்திரா DCM பவன் கல்யாணின் ‘உஸ்தாத் பகத் சிங்’ படத்திற்கு யு/ஏ தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. *சமுத்திரக்கனி, GVM நடித்துள்ள ‘கார்மேனி செல்வம்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது. *சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானும் ’ஜெயிலர் 2’ படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


