News June 26, 2024
புதுச்சேரி முதல்வர் அறிவுறுத்தல்

சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தை ஒட்டி புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தேசத்தின் ஆற்றலாக விளங்கக்கூடிய இளைஞர்கள் போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்க ஒன்றிணைந்து செயல்பட இந்நாளில் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
Similar News
News October 16, 2025
புதுச்சேரி: டிகிரி போதும்..ரயில்வேயில் வேலை

இந்திய ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் 5,800 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400
3. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
5. வயது வரம்பு: 18-35(SC/ST-5, OBC-3)
6.ஆரம்ப தேதி: 21.10.2025
7.கடைசி தேதி: 20.11.2025
8. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
News October 16, 2025
புதுவை: கட்டட தொழிலாளர்கள் சாலை மறியல்

புதுவை கட்டட தொழிலாளர்களுக்கு, நலவாரியம் மூலம் ஆண்டுதோறும் தீபாவளிக்கு போனஸ் வழங்கப்படுகிறது. கடந்தாண்டு ரூ.5,000 வழங்கப்பட்டது. அதனை இந்தாண்டு ரூ.6,000-ஆக உயர்த்தி வழங்க தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், 60 வயதிற்கு மேற்பட்ட கட்டட தொழிலாளர்களுக்கு போனஸ் இல்லை என்ற தகவல் பரவியது. இதனால் கட்டட தொழிலாளர்கள் நேற்று காலை இ.சி.ஆர் கொக்கு பார்க் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
News October 16, 2025
புதுச்சேரி: தடை செய்யப்பட்ட பட்டாசுகள் விற்றால் உரிமம் ரத்து

புதுச்சேரி கலெக்டர் குலோத்துங்கன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள், பட்டாசு உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் சுப்ரீம் கோர்ட் உத்தரவை கடைபிடிக்க வேண்டும். அதன்படி பட்டாசு மூலப்பொருள்களில் பேரியம் உப்புகள் பயன்படுத்த தடை. அதிக ஒலி எழுப்பும் வெடிகள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யக்கூடாது. இதனை மீறுபவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளது.