News June 26, 2024
காவல்நிலையத்தில் குஷ்பு ஆய்வு

கள்ளக்குறிச்சி காவல்நிலையத்தில் தேசிய மகளிர் ஆணையக் குழு உறுப்பினர் குஷ்பு ஆய்வு நடத்தி வருகிறார். தமிழகத்தையே உலுக்கிய கருணாபுரம் விஷச்சாராய உயிரிழப்புகள் குறித்த விவரங்களை அவர் கேட்டறிந்து வருகிறார். விஷச்சாராயம் குடித்தவர்களில், இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளனர். 150க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Similar News
News January 15, 2026
விவசாயிகள் சந்தோசமா இருக்கணும்.. ரஜினி வாழ்த்து!

தனது வீட்டு வாசலில் காலை முதல் காத்திருந்த ரசிகர்களை நோக்கி, புன்னகையுடன் கையசைத்த அவர், அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளை கூறினார். மேலும், நாட்டின் முதுகெலும்பான விவசாயிகள் சந்தோசமாக இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். பனியையும் பொருட்படுத்தாமல் காலை முதலே காத்திருந்த ரசிகர்கள் அவரை பார்த்தும் ‘தலைவா.. தலைவா’ என கத்தி கூச்சலிட்டனர்.
News January 15, 2026
அரசியல் தலைவர்களின் பொங்கல் வாழ்த்துகள் (PHOTOS)

உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள், உழைப்புக்கும் இயற்கைக்கும் நன்றி கூறும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவற்றை தெரிந்துகொள்ள மேலே உள்ள புகைப்படங்களை வலதுபுறம் SWIPE செய்யுங்கள். உங்கள் பொங்கல் வாழ்த்தை கமெண்ட்டில் பதிவிடுங்கள்.
News January 15, 2026
BREAKING: பொங்கல் நாளில் விஜய் அறிவித்தார்

உலகமெங்கும் உள்ள தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார் விஜய். ஏற்கெனவே, தமிழ்ப் புத்தாண்டு தை மாதமா, சித்திரை மாதமா என்ற சர்ச்சை இருந்து வரும் நிலையில், தன்னுடைய இந்த வாழ்த்தில் தமிழ்ப் புத்தாண்டு என அவர் பதிவிட்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது. இவ்வளவு நாள் ’ஜனநாயகன்’ பற்றி எதுவும் பேசாமல் இருந்த விஜய்யிடமிருந்து இந்த ட்வீட் வந்திருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.


