News June 26, 2024

சாதிவாரி கணக்கெடுப்பு தீர்மானம் நிறைவேறியது

image

2021ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வலியுறுத்தி, தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்த தனித் தீர்மானம், அனைத்துக் கட்சி எம்எல்ஏ.க்களின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, சட்டப்பேரவை கூட்டத்தொடர் முழுவதும் அதிமுக எம் எல் ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதால், இந்த விவாதத்தில் அவர்கள் பங்கேற்கவில்லை.

Similar News

News November 7, 2025

USA Passport-களில் இனி ஆண், பெண் மட்டுமே!

image

அமெரிக்காவில் டிரம்ப் பொறுப்பேற்றதில் இருந்து பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அதில் ஒன்று, USA Passport-களில் ஆண், பெண் என்ற இரு பாலினங்களை மட்டுமே குறிப்பிட முடியும் என்ற உத்தரவு. இந்நிலையில், இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், டிரம்பின் உத்தரவுக்கு தடை விதிக்க USA உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. இதனால் திருநங்கைகள், மற்றும் பிற பாலின மக்கள் அதிருப்தியில் ஆழ்ந்துள்ளனர்.

News November 7, 2025

அதிமுகவுடன் கூட்டணிக்காக காத்திருந்தேன்: வைகோ

image

2011-ல் கூட்டணி விவகாரத்தில் OPS செய்த தவறுக்கு தான், தற்போது அவர் பலனை அனுபவித்து வருவதாக வைகோ விமர்சித்துள்ளார். மதிமுக கூட்டத்தில் பேசிய அவர், 2011-ல் மதிமுகவுக்கு 12 இடங்களை மட்டுமே தருவதாக இருந்த போதும், அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தைக்காக காத்திருந்ததாக தெரிவித்துள்ளார். ஆனால் ஜெயலலிதாவிடம் வைகோ கூட்டணிக்கு தயாராக இல்லை என்று OPS பொய் சொல்லிவிட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

News November 7, 2025

கெளரி கிஷனுக்கு ஆதரவாக களமிறங்கிய குஷ்பூ

image

கெளரி கிஷனிடம் எடை குறித்து கேட்ட செய்தியாளரை குஷ்பூ விமர்சித்துள்ளார். பெண்ணின் உடல் எடை என்பது இவர்களுக்கு தேவையற்ற விஷயம் எனவும், மீடியா தரக்குறைவாகி வருவதாகவும் விமர்சித்தார். இக்கேள்வியை அவர் வீட்டு பெண்களிடம் கேட்டால் அமைதியாக இருப்பாரா என்று வினவிய குஷ்பூ, அவருக்கு பதிலடி கொடுத்த கெளரியையும் பாராட்டினார். மேலும், மரியாதை கொடுத்தால் மட்டுமே மரியாதை கிடைக்கும் எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.

error: Content is protected !!