News June 26, 2024
கல்கி 2898 AD படத்தின் டிக்கெட் விலை ₹2,300

நாளை ரிலீசாகும் ‘கல்கி 2898 AD’ படத்திற்கான டிக்கெட் முன்பதிவு, சென்னை, மும்பை, ஹைதராபாத் போன்ற பெருநகரங்களில் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், மும்பை ஜியோ வேர்ல்டு பிளாசாவில் உள்ள BKC திரையரங்கில், ஒரு டிக்கெட் ₹2,300க்கு விற்கப்படுகிறது. இதேபோல, LUXE வகை டிக்கெட்டுகள் ₹1,500க்கு விற்பனை செய்யப்படுகிறது. பிற நகரங்களில் ₹1,100 வரை டிக்கெட் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News August 22, 2025
சோழர்களுக்கு பெருமை சேர்ந்தவர் மோடி

PM மோடி சோழர்களுக்கு பெருமை சேர்த்திருப்பதாக அமித்ஷா தெரிவித்துள்ளார். நெல்லையில் நடைபெற்று வரும் அக்கட்சியின் மாநாட்டில் பேசிய அவர், கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திரனுக்கு விழா எடுத்தவர் மோடி என்றும், காசி சங்கம விழா தமிழுக்கு பெருமை சேர்க்கிறது எனவும் குறிப்பிட்டார். மேலும், மோடி தமிழ் மண்ணையும் மக்களையும் எப்போதும் மதிப்பவர் என்றும் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
News August 22, 2025
சற்றுமுன்: பாஜகவில் இணைந்தார் திமுக Ex பிரபலம்

திமுக Ex பிரபலம் KS ராதாகிருஷ்ணன் பாஜகவில் இணைந்துள்ளார். நெல்லையில் நடைபெற்று வரும் பாஜக மாநாட்டில் அமித்ஷா முன்னிலையில் அவர் தன்னை கட்சியில் இணைத்துக் கொண்டார். கட்சித் துண்டை போர்த்தி அவரை பாஜக நிர்வாகிகள் வரவேற்றனர். நெல்லையை சேர்ந்த KS ராதாகிருஷ்ணன், Ex முதல்வர்கள் காமராஜர், கருணாநிதி ஆகியோருடன் நல்ல நட்பில் இருந்தவர். 2022-ல் கார்கேவை விமர்சித்ததற்காக திமுகவிலிருந்து அவர் நீக்கப்பட்டார்.
News August 22, 2025
சட்டம் அறிவோம்: இரவில் ரயிலில் பயணிக்கும் போது..

இரவு ரயில் பயணங்களில் பலருக்கும் நெருடலை உண்டாக்குவது லைட் வெளிச்சம் தான். ஒருவருக்காக லைட்டுகள் எரிய விடப்பட்டிருக்கும். சங்கோச்சத்தின் காரணமாக, கேட்க முடியாமல் அமைதியாக இருப்போம். ஆனால், IRCTC விதியின் படி, இரவு 10 மணிக்கு மேல் பொது விளக்குகளை அணைக்கப்பட வேண்டும். தனிநபர் படிக்கவோ அல்லது எழுதவோ எண்ணினால், மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமல், ரீடிங் லைட்களைப் பயன்படுத்தலாம். SHARE IT.