News June 26, 2024
கோயில் திருவிழாவில் இளைஞர் வெட்டிக்கொலை

சோளிங்கர் அடுத்த கரிக்கன் தாங்கல் கிராமத்தில் கங்கை அம்மன் திருவிழா நேற்று இரவு நடந்தது. இதில் அதே பகுதியை சேர்ந்த தேவராஜ் மற்றும் சிலருக்கு இடையே குடிபோதையில் தகராறு ஏற்பட்டது. தேவராஜ் (30) கத்தியால் வெட்டி கொலை செய்யப்பட்டார். அவருக்கு செண்பகம் என்ற மனைவியும், 7 மற்றும் 4 வயதில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். சோளிங்கர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 24, 2026
ராணிப்பேட்டை பெற்றோர் கவனத்திற்கு!

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம், பெண் குழந்தைகள் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். *மறக்காம ஷேர் பண்ணுங்க*
News January 24, 2026
ராணிப்பேட்டை: சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு!

கேஸ் சிலிண்டருக்கு மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும், UMANG என்ற App மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க
News January 24, 2026
ராணிப்பேட்டை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கியாஸ் சிலிண்டர் நுகர்வோர்கள் மற்றும் வினியோகிக்கும் முகவர்கள் குறைதீர்வு கூட்டம் வருகிற ஜனவரி 30-ந் தேதி மாலை 3 மணி அளவில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் குறைபாடுகள், தேவைகள் குறித்து ஆலோசித்து குறைகள் களைவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, எரிவாயு நுகர்வோர்கள் கலந்து பயன் பெறலாம். என கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க


