News June 26, 2024
கள்ளச்சாராயம்: விழுப்புரம் கலெக்டர் அறிவிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம், போதைப் பொருள்கள் விற்பனை தொடர்பாக கடந்த ஓராண்டில் மட்டும் 10,236 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொதுமக்கள் இது தொடர்பாக புகார் எப்போது வேண்டுமானாலும் தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார். சென்னை மத்திய புலனாய்வு பிரிவுக்கு 10581 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News July 8, 2025
விழுப்புரம்: தொழிற்சங்கங்கள் சார்பில் நாளை போராட்டம்

மத்திய பாஜக அரசின் மக்கள் மற்றும் தொழிலாளர் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து, வரும் ஜூலை 9, 2025 அன்று அகில இந்திய பொது வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக, விழுப்புரம் மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் காலை 10 மணிக்கு விழுப்புரம் தலைமை தபால் நிலையம் எதிரில் மறியல் போராட்டம் நடைபெறும். இப்போராட்ட அழைப்பிதழை போக்குவரத்து தொ.மு.ச சார்பில் மு.அமைச்சர் பொன்முடிக்கு வழங்கப்பட்டது.
News July 8, 2025
ஆளுநரை வரவேற்ற ஆட்சியர்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி இன்று (08.07.2025) விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் மையத்திற்கு வருகைபுரிந்தார். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான், ஆளுநரை மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றார். அவருடன் உதவி ஆட்சியர் (பயிற்சி) ரா. வெங்கடேஷ்வரன், உடனிருந்தார்.
News July 8, 2025
வாடகை வீட்டில் குடியிருப்பவரா நீங்கள்? 2/2

தமிழ்நாடு, வீட்டு வாடகை முறைப்படுத்துதலுக்கன புதிய சட்டம் 2017ன் படி ஹவுஸ் ஓனர் குடியிருப்பவர் வீட்டிற்குள் 7 மணிக்குள் அல்லது இரவு எட்டு மணிக்குப் பின்னர் செல்ல கூடாது. 3 மாத வாடகையை மட்டுமே முன் பணமாகப் பெற வேண்டும். ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட வாடகையை மட்டுமே பெற வேண்டும். வாடகை ஒப்பந்தம் முடியாமல் வீட்டை காலி செய்ய சொல்ல கூடாது. கட்டாயம் ரசிது தர வேண்டும். ஒப்பந்ததை பதிவு செய்ய வேண்டும் SHARE IT