News June 26, 2024
விசாரணை நடத்துகிறார் குஷ்பு

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் தொடர்பாக விசாரணை நடத்த குஷ்பு தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை தேசிய மகளிர் ஆணையம் அமைத்திருக்கிறது . விஷச்சாராயம் குடித்து உயிரிழந்திருக்கும் 61 பேரில் 6 பெண்களும் அடங்குவர். ஆகையால், இந்த விவகாரத்தை தானாக முன்வந்து விசாரிக்கும் மகளிர் ஆணையம், குழுவின் தலைவராக குஷ்புவை நியமித்திருக்கிறது.
Similar News
News October 20, 2025
ராசி பலன்கள் (20.10.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News October 20, 2025
தோனியை ரோஹித், கோலி பின்பற்ற வேண்டும்: ஆரோன்

ஆஸி.,க்கு எதிரான ODI-ல் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் (8), கோலி (0) பெருத்த ஏமாற்றத்தையே அளித்தனர். தோனியை போல், இருவரும் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர் வருண் ஆரோன் அறிவுறுத்தியுள்ளார். டெஸ்ட்டில் இருந்து தோனி ஓய்வுபெற்ற பிறகு, சயீத் முஷ்டாக், விஜய் ஹசாரே கோப்பை போன்ற உள்ளூர் தொடர்களில் விளையாடியது போல், இருவரும் விளையாட வேண்டும் என கூறியுள்ளார்.
News October 20, 2025
நாளை மறந்தும் கூட இதை செய்து விடாதீர்கள்

தீபாவளியை முன்னிட்டு பட்டாசுகளை வெடிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, நாளை காலை 6 – 7 மணி, இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும். வாகனங்கள் நிறுத்தி வைத்திருக்கும் இடங்களில் வெடிக்கக்கூடாது. பட்டாசுகளை கொளுத்தி தூக்கி எறிந்து விளையாடக்கூடாது. குடிசைகளின் பக்கத்திலோ, ஓலைக் கூரைகள் உள்ள இடங்களிலோ பட்டாசு வெடிக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.