News June 26, 2024
தேனி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

தற்பொழுது வாட்ஸ் செயலியில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா என்ற பெயரில் தங்களுக்கு பணம் ரிவார்ட் கிடைத்துள்ளது என்ற பெயரில் அனுப்பப்படும் செயலியை யாரும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம். அவ்வாறு அனுப்பப்படும் செயலியை பதிவிறக்கம் செய்தால் உடனே தங்களது செல்போன் ஹேக் செய்யப்படும். எனவே பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு தேனி மாவட்ட காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News December 24, 2025
தேனி: அரசு பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலா?

தேனி மக்களே, அரசு பேருந்துகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம். இங்கு <
News December 24, 2025
தேனி: அரசு நிலத்தில் மணல் அள்ளிய 9 போ் மீது வழக்கு

போடி அருகே நியூட்ரினோ ஆய்வுக் கூடம் அமைக்க தோ்வு செய்யப்பட்ட அம்பரப்பா் மலைப் பகுதியில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் உள்ளது. இதில் சிலா் அனுமதியின்றி மணல் அள்ளுவதாக வந்த தகவலையடுத்து போடி தாலுகா போலீஸாா் நேற்று (டிச.23) அங்கு சென்றனர். அங்கு ஜேசிபி, டிப்பர் லாரி மூலம் 9 பேர் மணல் அள்ளிக்கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓடிய நிலையில் வாகனங்களை பறிமுதல் செய்து விசாரணை.
News December 24, 2025
தேனி: சினிமா பாணியில் மிளகாய் பொடி தூவி சென்ற திருடன்

மயிலாடும்பாறை இந்திரா நகரைச் சேர்ந்த ராணுவ வீரர் இந்தியன். இவரது மனைவி நிவேதா நேற்று காமயகவுண்டன்பட்டியில் உள்ள உறவினரின் நிகழ்ச்சிக்குச் சென்றார். திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 4 பவுன் நகைகள் திருடு போனது தெரியவந்தது. மேலும், திருடிய நபர் வீட்டில் மிளகாய்ப் பொடியை தூவி விட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. மயிலாடும்பாறை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை.


