News June 26, 2024
சீர்மரபினர் நல வாரியத்தில் நலத்திட்ட உதவிகளை பெற விண்ணப்பிக்கலாம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இதற்கு நலவாரியத்தில் உறுப்பினராக விண்ணப்பிக்க வேண்டும். இந்த வாரியத்தில், பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு பல்வேறு, உதவித்தொகை மற்றும் சலுகை வழங்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் ச. அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 31, 2025
செங்கை: முதியவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு!

சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த காய்கறி வியாபாரி ஆறுமுகம் (61). தனது மனைவி கஸ்தூரியின் (54) நடத்தையில் சந்தேகமடைந்து, கடந்த 2021-ம் ஆண்டு கத்தியால் குத்திக் கொலை செய்தார். இது தொடர்பான வழக்கை விசாரித்த செங்கல்பட்டு மகிளா நீதிமன்ற நீதிபதி எழிலரசி, குற்றம் நிரூபிக்கப்பட்ட ஆறுமுகத்திற்கு ஆயுள் தண்டனையும், 3 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
News December 31, 2025
திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட நால்வர் கைது

தாம்பரம் பேருந்து நிலையம் மற்றும் கூட்ட நெரிசலான பகுதிகளில் முதியவர்களை குறிவைத்து செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்த 4 பேரை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர். முன்னாள் ராணுவ வீரரான மைக்கேல் (55) என்பவரைத் தாக்கி அவரது செல்போனை பறித்த வழக்கில், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் 4 பேரையும் பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.