News June 26, 2024
அண்ணாமலையார் கோவிலில் மூன்றாண்டுக்கான ஓதுவார் பயிற்சி

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உணவு, தங்குமிடம், மாதம் ரூ.4 ஆயிரத்துடன் ஓதுவார் பயிற்சிப் பள்ளியில் மூன்றாண்டுக்கான சான்றிதழ் படிப்பில் மாணவர்கள் சேரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி ஜூலை 19 மாலை 05.00 மணி. விண்ணப்ப படிவங்களை திருக்கோயில் அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம். வயது வரம்பு 13 வயது முதல் அதிகபட்சம் 20 வயதிற்கு மேற்படாமல் இருக்க வேண்டும்.
Similar News
News March 12, 2026
தி.மலை: குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News March 12, 2026
தி.மலை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 வயது முதல் 60 வயது வரை உள்ள உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியத் தொகை ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தி தமிழ்நாடு அர சால் ஆணையிடப்பட்டு உள்ளது. இதற்கான விண்ணப்ப தேதி நாளையுடன் முடிவடைகிறது. எனவே பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நாளை சிறுபான்மையினர் அலுவலகத்தில் அளிக்குமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News March 12, 2026
தி.மலையில் 551 பேர் ஆப்சென்ட்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் 498 அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 15 ஆயிரத்து 692 மாணவர்கள், 14 ஆயிரத்து 825 மாணவிகள் என மொத்தம் 30 ஆயிரத்து 517 மாணவ, மாணவிகளுக்கு 10ம் வகுப்பு தேர்வு எழுத ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது. இதில் 29 ஆயிரத்து 966 பேர் தேர்வு எழுதினர். மீதமுள்ள 551 பேர் தேர்வு எழுத வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


