News June 26, 2024
மண் வளத்தை அறிந்து கொள்ள இணையதளம் உருவாக்கம்

மண்ணின் வளத்தை அறிந்து கொள்வதற்கு வசதியாக மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் கவிதா வெளியிட்ட செய்திக் குறிப்பில், வேளாண்மை துறை மூலம் தமிழ் மண்வளம் என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் புல எண் வாரியாக மண்ணின் ஊட்டச்சத்து நிலை அதற்கு ஏற்ற உரம், மண்ணிற்கேற்ப பயிர்கள், பரிந்துரை செய்யப்படும். எனவே நாமக்கல் மாவட்ட விவசாயிகள் இணையதளத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News September 9, 2025
நாமக்கல்: கனரா வங்கியில் பயிற்சி.. மாதம் ரூ.22,000!

நாமக்கல் மக்களே, கனரா வங்கியின் கீழ் செயல்படும் கனரா வங்கி செக்யூரிட்டீஸ் பிரிவில் காலியாக உள்ள டிரைய்னி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். பயிற்சி பெறும் நபர்களுக்கு மாதம் ரூ.22,000 உதவித்தொகை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News September 9, 2025
நாமக்கல்லில் தவெக தலைவர் விஜய்!

தமிழக சட்டமன்ற தேர்தல் – 2026-ஐ முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய் வரும் 13ஆம் தேதி முதல் டிசம்பர் 20ஆம் தேதி வரை தமிழகத்தில் பிரச்சாரம் செய்கிறார். இதில், வரும் டிசம்பர் 13 ஆம் தேதி நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை தந்து பிரச்சாரம் செய்ய உள்ளார். மேலும் பிரச்சார நிகழ்விற்கு தற்போது காவல்துறையிடம் பாதுகாப்பு கோரப்பட்டுள்ளது.
News September 9, 2025
நாமக்கல்: மின் துறையில் SUPERVISOR வேலை!

நாமக்கல் மக்களே மத்திய அரசின் மின்சாரத் துறையில் கள பொறியாளர் & மேற்பார்வையாளர் பணிக்கு 1,543 காலியிடங்கள் உள்ளது. இதற்கு BE / B.Tech / B.Sc படித்தவர்கள் விண்ணபிக்கலாம். சம்பளமாக ரூ.23,000 முதல் ரூ.1,20,000 வரை வழங்கப்படும்.<