News June 26, 2024
சிவகங்கை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

சிவகங்கை மாவட்டத்தில் 2023 – 24ஆம் ஆண்டிற்கான, மணிமேகலை விருதுக்கு தகுதியுள்ள சமுதாய அமைப்புகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும், கூடுதல் விபரங்களுக்கு திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு மாநில ஊரகவாழ்வாதார இயக்கம், சிவகங்கை என்ற முகவரியில் நேரிலோ அல்லது 04575-240962 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா தெரிவித்துள்ளார்.
Similar News
News March 3, 2026
காரைக்குடியில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக சிவகங்கை மாவட்ட திமுக துணைச் செயலாளர் ஜோன்ஸ் ரூசோ நேற்று (மார்ச் – 02) சென்னை அறிவாலயத்தில் விருப்ப மனு அளித்தார். உடன் கட்சியைச் சேர்ந்த முக்கிய பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் மற்றும் ஏராளமான திமுக ஆதரவாளர்கள் இருந்தனர்.
News March 3, 2026
சிவகங்கை: தீ விபத்தில் கருகிய 30 உயிர்கள்

காளையார் கோவில் அருகே உள்ள நல்லேந்தல் கிராமத்தை சேர்ந்த விவசாயி சுதாகர். இவர் சாலைக்கிராமம் அருகே உள்ள குறிச்சி கிராம வயல் பகுதிகளில் ஆட்டு கிடை அமைத்துள்ளார். இவரது கிடை அருகில் உள்ள வயல்களில் திடீரென தீ பற்றியதைத் தொடர்ந்து பலத்த காற்றினால் சுதாகர் கிடை அமைத்திருந்த வயலிலும் தீ பரவியதால் அங்கு பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 30 க்கும் மேற்பட்ட ஆடுகள் தீயில் கருகி பலியாகின.
News March 2, 2026
வங்கி ஒருங்கிணைப்பாளர் பணியாற்ற விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் மாவட்ட வங்கி ஒருங்கிணைப்பாளராக (District Banking Co-ordinator) பணியாற்ற தகுதியுள்ள நபர்கள் 07.03.25 ஆம் தேதி மாலை 05.45 மணிக்குள் மாவட்ட மக்கள் கற்றல் மையம், மாவட்ட இயக்க மேலாளர்மை அலகு, கோர்ட் வாசல் அருகில், மேலூர் ரோடு, சிவகங்கை 630561 என்ற முகவரியை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் பொற்கொடிஇன்று தெரிவித்துள்ளார்


