News June 26, 2024
நெல்லையப்பர் கோயிலுக்கு புதிய தேர், வடம்

திருநெல்வேலி, நெல்லையப்பர் கோயிலில் உள்ள சண்டிகேஸ்வரர் தேர் பழுதடைந்து விட்டதால் ரூ.59 லட்சத்தில் புதிய தேர் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோல் சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் தேர்களின் வடங்கள் பழுதாகி விட்டதால் ரூ.24 லட்சம் மதிப்பில் 6 புதிய வருடங்கள் வாங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 21, 2026
நெல்லை : கல்யாண சான்று ONLINE விண்ணப்பம் – LINK!

நெல்லை மக்களே, ரேஷன் கார்டு, கேஸ், பாஸ்போர்ட், காப்பீடு மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளை பெற மிக அரசு திருமண சான்றிதழ் அவசியமான ஆவணமாகும். இங்கு <
News January 21, 2026
நெல்லையில் ஒருவர் மீது குண்டர் சட்டம்

நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் பிள்ளையார் கோவில் தெருவில் வசிக்கும் கண்ணன் என்பவரை ரெட்டியார்பட்டி எஸ்.ஆர்.குளத்தைச் சேர்ந்த ஜெகன் (32) பணம் பறிக்கும் நோக்கத்துடன் மிரட்டியுள்ளார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த ஜெகன் ஆணையர் மணிவண்ணன் ஆணைப்படி இன்கு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
News January 21, 2026
நெல்லையில் 11 காவல் உதவி ஆய்வாளர்களுக்கு உத்தரவு

நெல்லை மாநகர காவல் ஆணையாளர் மணிவண்ணன் உத்தரவின்படி நேற்று (ஜன.20) மாநகரத்தில் உள்ள காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் மதர்கான் சந்திப்பு காவல் நிலையத்திலிருந்து மேலப்பாளையம் காவல் நிலையத்திற்கும், அப்துல் ஹமீத் பெருமாள்புரம் காவல் நிலையத்திலிருந்து சிசிபிக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு மொத்தம் 11 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


