News June 26, 2024
நடிகர் தர்ஷனுக்கு மனநல பாதிப்பு?

கொலை செய்த வழக்கில் கைதாகியுள்ள நடிகர் தர்ஷனுக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாக அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சிறிய விஷயங்களிலும்கூட எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர் என்றும், படப்பிடிப்பு தளங்கள் உள்ளிட்ட பல இடங்களில் பலருடன் சண்டை போட்டு இருக்கிறார் என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது மனநல பாதிப்பை வெளிப்படுத்தும் அறிகுறி என்று கூறப்படுகிறது.
Similar News
News September 16, 2025
IND A vs AUS A: விக்கெட் வீழ்த்தாமல் திணறும் இந்தியா

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸி., A அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டியில் டாஸ் வென்ற ஆஸி., அணி பேட்டிங் ஆடி வருகிறது. முதல் இன்னிங்ஸின் டீ பிரேக் வரை ஒரு விக்கெட் கூட இழக்காமல், இந்திய அணியை திணறடித்து வருகிறது. இதுவரை விக்கெட் இழப்பின்றி, 198 ரன்களை அந்த அணி எடுத்துள்ளது. சாம் கோன்ஸ்டாஸ் சதம் (101 ரன்கள்) அடித்த நிலையில் களத்தில் உள்ளார்.
News September 16, 2025
ஆங்கில வெப் சீரிஸில் சித்தார்த்

‘Unaccustomed Earth’ என்ற ஆங்கில வெப் சீரிஸில் சித்தார்த் நடிக்கவுள்ளார். இவருடன் ‘Slumdog Millionaire’ படத்தில் நடித்திருந்த ஹாலிவுட் நடிகை ஃபெரிடா பிண்டோ ஹீரோயினாக நடிக்கிறார். Jhumpa Lahiri என்ற பிரிட்டிஷ் – ஆங்கில எழுத்தாளரின் சிறுகதை தொகுப்பை தழுவி இத்தொடர் தயாராகிறது. புகழ்பெற்ற Warner Brothers நிறுவனம், இத்தொடரை தயாரிக்கிறது. இந்த தொடர் நேரடியாக Netflix தளத்தில் வெளியாகவுள்ளது.
News September 16, 2025
BREAKING: சனிக்கிழமை பிளானை மாற்றினார் விஜய்

<<17725321>>தேர்தல் பரப்புரைக்காக<<>> ஒவ்வொரு சனிக்கிழமையும் 3 மாவட்ட மக்களை விஜய் சந்திப்பதற்கு பிளான் போடப்பட்டிருந்தது. ஆனால், கடந்த சனிக்கிழமை 2 மாவட்டங்களில் மட்டுமே விஜய்யால் பரப்புரை மேற்கொள்ள முடிந்தது. இதனையடுத்து, ஒவ்வொரு பரப்புரை நாளன்றும் 2 மாவட்டங்களுக்கு மட்டுமே செல்லும் வகையில் விஜய் தனது பிளானை மாற்றியுள்ளார். அவரது புதிய பரப்புரை அட்டவணை விரைவில் வெளியாகும் என தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.