News June 26, 2024
பலி எண்ணிக்கை 60ஆக உயர்வு

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60ஆக உயர்ந்துள்ளது. நேற்று வரை 59 பேர் உயிரிழந்திருந்த நிலையில் இன்று காலை கருணாபுரத்தைச் சேர்ந்த ஏசுதாஸ் உயிரிழந்தார். மேலும் 150க்கும் மேற்பட்டோர் சேலம், புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Similar News
News November 28, 2025
BREAKING: கூட்டணி முடிவை அறிவித்தார் அன்புமணி

திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றும் கூட்டணியில் பாமக இடம்பெறும் என அன்புமணி ஊர்ஜிதமாக கூறியுள்ளார். அனைத்து தரப்பு மக்களும் திமுக அரசு மீது கடும் கோபத்தில் உள்ளதாக கூறிய அவர், மக்கள் அனைவரும் தேர்தலுக்காக காத்துக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தமிழக அரசு மட்டுமல்லாமல், மத்திய அரசு செய்யும் தவறுகளையும் பாமக சுட்டிக்காட்டுவதாக அவர் பேசியுள்ளார்.
News November 28, 2025
GK TODAY: 3-ம் உலக நாடுகள் தெரியுமா?

1950 முதல் 1990கள் வரை அமெரிக்கா – ரஷ்யா (அன்று சோவியத் யூனியன்) பனிப்போர் காலத்தில், அமெரிக்க ஆதரவு நாடுகள் முதலாம் உலக நாடுகள், சோவியத் யூனியன் ஆதரவானவை 2-ம் உலக நாடுகள் என்றும், 2-லும் சேராத ‘அணிசேரா’ நாடுகள் 3-ம் உலக நாடுகள் எனவும் அழைக்கப்பட்டன. 1991-ல் சோவியத் யூனியன் சிதைந்த பின், பொருளாதாரத்தில் பின்தங்கிய, அரசியல் நிலையற்ற ஏழை நாடுகளை குறிப்பதாக ‘3-ம் உலக நாடுகள்’ என்பது மாறிவிட்டது.
News November 28, 2025
RCB-யை தொடர்ந்து ஏலத்திற்கு வரும் RR?

RCB அணியின் உரிமை கைமாறவுள்ளது அறிந்த செய்தியே. அந்த அணியை வாங்க பலத்த போட்டி நிலவி வரும் நிலையில், தற்போது RR அணியும் ஏலத்திற்கு வந்துள்ளதாக தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா இது குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆனால், இன்னும் RR அணியின் உரிமம் கைமாறுவது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகாத நிலையில், இத்தகவல் ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பை தூண்டியுள்ளது.


