News June 26, 2024
விஷச்சாராயம் மரணம்: இன்று விசாரணை

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு முகமை விசாராணை நடத்த உத்தரவிட வேண்டும் என பாமக மற்றும் அதிமுக கட்சிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. அந்த வழக்குகள் இன்று விசாரிக்கப்பட உள்ளன.
Similar News
News November 4, 2025
உலக சந்தையில் தங்கம் விலை மீண்டும் குறைந்தது

சர்வதேச சந்தையில் தங்கம் விலை கண்ணாமூச்சி ஆடிவருகிறது. அக்டோபர் மாத இறுதியில் தொடர்ந்து சரிந்து வந்த தங்கம் கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கத்தை கண்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ்(28g) தங்கம் $16 குறைந்து $3,986-க்கு விற்பனையாகிறது. நேற்று, இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்த நிலையில், சர்வதேச சந்தையில் இதே நிலை நீடித்தால் நம்மூர் சந்தையிலும் தங்கம் விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.
News November 4, 2025
உடல் எடை குறைய காலையில் ஒரு நிமிஷம் இத பண்ணுங்க!

உடல் எடை குறைய Jumping Lunges(ஜம்பிங் லஞ்சஸ்) செய்யலாம் ★செய்முறை: முதலில் தரையில் நேராக நிற்கவும். இடது காலை மடக்கி, முன்னே எடுத்து வைக்கவும் (படத்தில் உள்ளது போல). அப்போது வலது முழங்காலை பின்னால் மடக்கி வைக்கவும் (படத்தில் உள்ளது போல) இப்போது குதித்தெழுந்து, முன்னர் செய்தது போல, கால்களை மாற்றி செய்யவும் ★இந்த உடற்பயிற்சியை, தொடக்கத்தில் ஒரு நிமிடம் வரை செய்யலாம். SHARE IT.
News November 4, 2025
BREAKING: அதிமுகவில் மீண்டும் இணைந்தார்

OPS அணியை சேர்ந்த வட சென்னை மாவட்ட செயலாளர் P.S.சிவா, EPS முன்னிலையில் தன்னை மீண்டும் அதிமுகவில் இணைத்து கொண்டார். அதேபோல், OPS அணியின் மாநில மாணவர் அணி இணைச் செயலாளர் சாய் அருனேஷ், RK நகர் பகுதிச் செயலாளர் விஜயகுமார், வட சென்னை மாவட்ட பேரவை செயலாளர் முருகன் உள்ளிட்டோரும் அதிமுகவில் இணைந்துள்ளனர். திமுக வலுவாக உள்ள வட சென்னையை அதிமுக கைப்பற்ற தீவிரமாக பணியாற்றி வருகிறது.


