News June 26, 2024
அன்னவாசல் விபத்தில் காயமடைந்தவர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர்

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகில் தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை, மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா இன்று நேரில் சந்தித்தார். உடன், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா, இருக்கை மருத்துவ அலுவலர் மரு.இந்திராணி, வட்டாட்சியர் பரணி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.
Similar News
News March 8, 2026
புதுகை: உங்களிடம் கட்டாயம் இருக்க வேண்டிய எண்கள்!

1. மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2 .அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4. குழந்தைகளுக்கான அவசர உதவி – 1098
5. முதியோருக்கான அவசர உதவி -1253
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி – 1033
7. பெண்கள் பாதுகாப்பு – 181 / 1091
இப்போது இல்லை என்றாலும் எதோ ஒரு அவசரக் காலத்தில் இந்த எண்கள் நமக்கு உதவும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
News March 8, 2026
புதுகையில் நாளை தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்

புதுகை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழில் பயிற்சி நிலையங்களில் படித்து, அகில இந்திய தொழிற்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான தொழிற்பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை முகாம் நாளை நடைபெறவுள்ளது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்வில், தனியார் நிறுவனங்கள் பங்கேற்பதால் விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் என கலெக்டர் மு.அருணா தெரிவித்துள்ளார்.
News March 8, 2026
புதுக்கோட்டை: மதுபோதையில் ரகளை – ஒருவர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம் அடுத்த செட்டியாபட்டி கிளை சாலையில் நேற்று கணேஷ்குமார் (35) என்பவர் மது அருந்திவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த நமண சமுத்திரம் காவல்துறையினர் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை மேற்கொண்டு பிணையில் விடுவித்தனர்.


