News June 26, 2024

விவசாயிகள் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

image

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த மாதத்திற்கான கூட்டம் நாளை (ஜூன் 27) தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக முத்து அரங்கில் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதில் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

Similar News

News September 10, 2025

தூத்துக்குடி: வங்கி வேலைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

image

இந்திய ரிசர்வ் வங்கியில்(RBI) கிரேடு B ஆட்சேர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 120 காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில் பட்டப்படிப்பு படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள்<> இங்கே கிளிக் செய்து<<>> செப்.30 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். தூத்துக்குடி மாவட்டத்தில் வங்கி, போட்டி தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். உங்களது நண்பர்களுக்கு SHARE செய்யுங்கள்.

News September 10, 2025

தூத்துக்குடியில் 21 துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் கோர்ட்டு பயிற்சி முடித்த துணை தாசில்தார்கள் புதிய பணியிடங்களில் பணி நியமனம் செய்தும், நிர்வாக காரணங்களுக்காக துணை தாசில்தார்கள் பணியிட மாற்றமும் செய்யப்பட்டு உள்ளனர். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றி வரும் 21 துணை தாசில்தார்களை மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

News September 10, 2025

தூத்துக்குடி: குத்திக் கொன்ற 2 பேருக்கு ஆயுள் தண்டனை

image

திரேஸ்புரம் மாதவர் நாயர் காலனியைச் சேர்ந்த முனியசாமி தனது பேத்தி முத்துமாலையை பார்ப்பதற்காக கடந்த 17.6.2022 அன்று சின்னத்தம்பியின் அண்ணன் மாரி சக்தி என்பவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் முனியசாமி திரேஸ்புரம் மலர்மண்டபம் அருகே வரும்போது கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதில் சின்னத்தம்பி,கருப்புசாமிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

error: Content is protected !!