News June 26, 2024
இன்று இறுதி வேட்பாளர்கள் பட்டியல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை 10ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரை நடைபெற்ற நிலையில், 29 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன. வேட்பு மனுவை வாபஸ் பெற இன்று கடைசி நாள் என்பதால், மாலை 3 மணிக்கு மேல் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News March 7, 2026
விஜய்க்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்குமா? திருமா பதில்

வரும் தேர்தலில் விஜய் எதிர்க்கட்சியாக அமர வாய்ப்புள்ளதாக <<19316817>>ஜோதிமணி <<>>கூறியிருந்தார். இதுகுறித்து திருமாவளவனிடம் கேட்டபோது, அது ஜோதிமணியின் கருத்து; மக்கள்தான் அதை தீர்மானிக்க வேண்டும் என பதில் அளித்தார். மேலும், விஜய்க்கு ஊடக வெளிச்சம் அதிகமாக இருப்பதாகவும், TN அரசியலையே அவர் தலைகீழாக மாற்றப்போகிறார் என்ற அளவுக்கு திட்டமிட்டு செய்திகள் பரப்பப்படுவதாகவும் திருமா கூறியுள்ளார்.
News March 7, 2026
மதுப் பிரியர்களுக்கு அதிர்ச்சி

‘ஹெல்த் கான்ஷியஸ்’ என்ற பெயரில் சிலர் மதுவில் டயட் சோடாவை கலந்து குடிப்பார்கள். ஆனால், இது ஆபத்தை ஏற்படுத்தும் என ஓர் ஆய்வு எச்சரிக்கிறது. அதாவது, சாதாரண சோடாவை கலந்து குடிப்பவர்களை விட, டயட் சோடா கலந்து மது அருந்துவோரின் ரத்தத்தில் மிக விரைவாக ஆல்கஹால் கலந்து மிதமிஞ்சிய போதையை ஏற்படுத்தி விடுகிறதாம். டயட் சோடாவில் சர்க்கரை குறைவாக இருப்பதால், ரத்தம் விரைவாக ஆல்கஹாலை உறிஞ்சி விடுகிறதாம்.
News March 7, 2026
T20 WC: நாளை வருண் விளையாடுவாரா?

வருண் சக்ரவர்த்தி நாளை நியூசிலாந்துக்கு எதிரான பைனலில் விளையாடுவது சந்தேகம் என்று செய்திகள் வெளியாகின. இதுகுறித்து பேசிய கேப்டன் சூர்யகுமார், வருணின் ஃபார்ம் பற்றி தங்களுக்கு கவலையில்லை; நம்பர் 1 பவுலரான அவருக்கு அணியை எப்படி வெற்றி பெறச் செய்வது என்று தெரியும் என்று கூறினார். மேலும், லெவனில் யார் இடம்பெறுவார்கள் என்பது குறித்து நாளை தெரியவரும் என்றார்.


