News June 26, 2024
கஞ்சா பயன்பாடு குற்றமாகாது: பிரேசில் நீதிபதி

தனிப்பட்ட பயன்பாட்டிற்காக கஞ்சா வைத்திருப்பது குற்றமாகாது என பிரேசில் உயர்நீதிமன்ற நீதிபதி டோஃபோலி தெரிவித்துள்ளார். இது குறித்த விசாரணை கடந்த 2015 முதல் நடைபெற்று வரும் நிலையில், உச்சநீதிமன்றத்தின் 11 நீதிபதிகளில் மூவர் மட்டுமே குற்றமில்லை என்ற முடிவை எதிர்த்துள்ளனர். மருத்துவ பயன்பாட்டிற்காக ஒரு சில நாடுகளில் கஞ்சா பயன்படுத்த நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
Similar News
News March 2, 2026
NDA கூட்டணியில் பெரிய காமெடி: CM ஸ்டாலின்

திமுக கிடப்பில் போட்ட மதுரவாயல் துறைமுகம் சாலை திட்டத்தை பாஜக உயிர்ப்பித்ததாக PM மோடி பேசியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள CM ஸ்டாலின், அத்திட்டத்தை தடுத்ததே அதிமுகதான் என PM-க்கு தெரியுமா என கேட்டுள்ளார். மேலும், அதிமுக ஆட்சியமைக்கும் என EPS-ம், NDA ஆட்சியமைக்கும் என மோடியும் சொல்வதாக கூறிய அவர், யாருக்கு யார் தலைமை என்பதே தெரியவில்லை என்பதுதான் பெரிய காமெடியே என விமர்சித்திருக்கிறார்.
News March 2, 2026
ரேஷன் அட்டை இல்லாமலே பொருள் வாங்கலாம்.. TRY THIS

மக்களே, ரேஷன் கார்டு இல்லாமலேயே பொருள்கள் வாங்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? Mera Ration 2.0 செயலி மூலமாக இது சாத்தியமே. இதற்கு, செயலியை பதிவிறக்கம் செய்து, உங்கள் ஆதார் எண்ணை உள்ளிடுங்கள். இதில் காட்டும் டிஜிட்டல் ரேஷன் கார்டை வைத்து பொருள்களை வாங்கிக்கொள்ளலாம். பேரிடர் காலங்களில் ரேஷன் கார்டை தொலைத்துவிட்டால், இதை செய்யுங்கள். இந்த முக்கிய தகவலை எல்லாருக்கும் SHARE பண்ணலாமே.
News March 2, 2026
கமேனியின் மரணத்திற்கு இந்தியர்கள் ஏன் அழுகிறார்கள்?

ஈரான் தலைவர் கமேனி மரணத்துக்கு இந்திய முஸ்லிம்கள் ஏன் அழுகிறார்கள் என்ற கேள்வி எழலாம்? அயதுல்லா அலி கமேனி, ஈரான் உயர் தலைவர் மட்டுமல்ல. Shia clergy எனப்படும் ஷியா முஸ்லிம்களின் மத அறிஞர்களின் வரிசையில் முக்கிய ஆன்மிக வழிகாட்டிகளில் ஒருவராகவும் அயதுல்லா அலி கமேனி கருதப்பட்டார். இதனால், அவரை தங்களின் அரசியல் & மத வழிகாட்டியாக மதித்த ஷியா முஸ்லிம்கள் வேதனையில் கண்ணீர் சிந்தி வருகின்றனர்.


