News June 26, 2024
முடி உதிர்வை தடுக்கும் மூலிகை எண்ணெய்

உடல் உஷ்ணம் காரணமாக ஏற்படும் முடி உதிர்வை தடுக்க ஓரிதழ் தாமரை எண்ணெய்யை பயன்படுத்தலாம் என சித்த மருத்துவ நூல்கள் பரிந்துரைக்கின்றன. பொடுதலை, செம்பரத்தை, மருதாணி இலைகளோடு ஓரிதழ் தாமரை இலைகளை அரைத்து நல்லெண்ணெய்யில் இட்டுக் காய்ச்சி, முடித் தைலமாக வாரம் இருமுறை பயன்படுத்தி வந்தால், கூந்தல் வளர்ச்சி அதிகரிப்பதுடன், பொடுகுத் தொந்தரவின் தீவிரமும் குறையும்.
Similar News
News March 4, 2026
விஜய்யின் மேடை பேச்சு வெறும் பெர்ஃபாமன்ஸ்: ரவிக்குமார் MP

விஜய்க்கு அரசியல் களத்திற்கும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கும் வித்தியாசம் தெரியவில்லை என ரவிக்குமார் MP விமர்சித்துள்ளார். மேலும், மேடையில் அவர் பேசுவதெல்லாம் வெறும் பெர்ஃபாமன்ஸ் என்றும், ஆனால் பல இளைஞர்கள் மற்றும் பெண்கள் அவரை பின் தொடர்வது வேதனையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். வரும் தேர்தலில் தவெக படுதோல்வியை சந்தித்த பின், விஜய்யின் மாயை விலகிவிடும் எனவும் கூறியுள்ளார்.
News March 4, 2026
BREAKING: தங்கம் விலை தலைகீழாக குறைந்தது

மார்ச் மாதம் தொடங்கியதில் இருந்தே ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. அந்த வகையில் இன்று, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹2,120 குறைந்து ₹1,21,600-க்கும், கிராமுக்கு ₹265 குறைந்து ₹15,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
News March 4, 2026
ராஜ்யசபா MP யார்? EPS இன்று முடிவு

ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களுடன் EPS இன்று ஆலோசனை செய்யவிருக்கிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக சார்பில் யார் ராஜ்யசபா வேட்பாளர் என்று முடிவு எடுக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல, தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் முக்கிய வாக்குறுதிகள், கூட்டணி கட்சிகளுடன் இணைந்து செயல்படுவது, தேர்தல் பணிகள், நலத்திட்டப் பணிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.


