News June 26, 2024

ஓவைசியின் கோஷம் நீக்கம்

image

ஹைதராபாத் எம்பி அசாதுதீன் ஓவைசி மக்களவையில் நேற்று பொறுப்பேற்கும் போது, பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ‘ஜெய் பாலஸ்தீன்’ என கோஷமிட்டார். இதற்கு ஆளுங்கட்சி தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது. அதைத் தொடர்ந்து, தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மஹ்தாப், அவைக்குறிப்பில் பதவியேற்பு உறுதிமொழி மட்டுமே இடம்பெறும் என கூறி, ஓவைசி எழுப்பிய முழக்கத்தை சபைக்குறிப்பில் இருந்து நீக்கினார்.

Similar News

News March 10, 2026

BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹800 உயர்வு!

image

தங்கம் விலை மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹100 உயர்ந்து ₹15,050-க்கும், சவரனுக்கு ₹800 உயர்ந்து ₹1,20,400-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் இன்று காலை சரிந்த தங்கம், தற்போது மீண்டும் ஏற்றம் கண்டுள்ளதால் இந்திய சந்தையிலும் தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது.

News March 10, 2026

அமெரிக்காவுக்கு எதிராக குரல் கொடுத்த சீனா

image

ஈரானின் புதிய உச்சத் தலைவராக யார் வந்தாலும் குறிவைப்போம் என அமெரிக்கா, இஸ்ரேல் கூறும் நிலையில் அதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஈரானின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என்ற சீனா, ஈரானின் இறையாண்மை, பாதுகாப்பு, பிராந்திய ஒருமைப்பாடு முழுமையாக மதிக்கப்பட வேண்டும் என கூறியுள்ளது. மேலும், அனைத்து தரப்பினரும் உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

News March 10, 2026

சாதி, மதம் பார்த்து ஓட்டு போடாதீங்க: துரை வைகோ

image

சாதி, மதப் பெருமைகளை பேசுவதாலும், இன்னொரு சாதியை திட்டுவதாலும் எந்த பயனும் கிடையாது என்று துரை வைகோ தெரிவித்துள்ளார். சாதி, மதங்களை கடந்தும், அரசியல் வேறுபாடுகளை கடந்தும் அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் எனக் கூறிய அவர், சாதி, மதம் பார்ப்பது மதிமுக வேட்பாளராக இருந்தாலும் அவருக்கு ஓட்டுப் போடாதீங்க; நல்ல தலைவர்களைதான் தேர்ந்தெடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!