News June 26, 2024

ஆஃப்கன் வளர்ச்சியில் இந்தியாவின் பங்கு

image

ICC-யில் கடந்த 2017ல் ஆஃப்கன் அணி நிரந்தர உறுப்பினரான நிலையில், மிகக் குறுகிய காலத்தில் டி20 உலகக்கோப்பை அரையிறுதிக்கு முதல்முறையாக முன்னேறியுள்ளது. ஆஃப்கனின் வளர்ச்சியில் BCCI-யின் பங்கு முக்கியமானது. உத்தரபிரதேசம் ஆஃப்கனுக்கு தற்காலிக சொந்த மைதானமாக இருந்தது முதல், இந்திய பயிற்சியாளர்களின் பயிற்சி மற்றும் IPL வரை, அந்த நாட்டு வீரர்களை செதுக்கியதில் இந்தியாவின் பங்களிப்பு கணிசமாக உள்ளது.

Similar News

News October 19, 2025

தங்கம் விற்பனை 25% குறைந்தது

image

தங்கம் விலை ஏற்றத்தால் தீபாவளி பண்டிகைக்கான விற்பனை 25% சரிந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பேசிய தமிழ்நாடு நகை வியாபாரிகள் சம்மேளனத்தின் ஆலோசகர் SKS சையது அகமது, தங்கம் விலையேற்றம் எங்கு போய் முடியும் என தெரியவில்லை என்றார். மேலும், விலை உயர்வால் நகை வியாபாரிகள் மகிழ்ச்சியில் இல்லை எனவும், பல கோடிகள் அதில் முடங்கியுள்ளதால் விற்பனை செய்யமுடியாமல் திணறி வருவதாக கூறினார்.

News October 19, 2025

FLASH: சீமான் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

image

நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக, சீமான் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்தாண்டு நவ. மாதம் யூடியூப் சேனல் ஒன்றில் பேசிய சீமான், நீதிமன்ற செயல்பாடுகளை ஆபாச வார்த்தைகளால் பேசியதாக கூறி சார்லஸ் அலெக்சாண்டர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் மீது, எழும்பூர் கோர்ட் உத்தரவின் அடிப்படையில், திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

News October 19, 2025

இனி Whatsapp-ல் இந்த தொல்லை இல்ல; புது அப்டேட்!

image

Whatsapp-ல் நிறைய Ad மெசேஜஸ் வருதா? இந்த தொல்லையை தீர்க்கும் நோக்கில் Whatsapp தற்போது புதிய அம்சத்தை உருவாக்கி வருகிறதாம். இதில், நீங்கள் ரிப்ளை செய்யாமல் வைத்திருக்கும் நபர் (அ) நிறுவனங்களை Whatsapp நிறுவனம் கண்காணிக்கும். பிறகு, உங்களுக்கு மெசேஜ் அனுப்ப முடியாமல் அவர்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும். கூடிய விரைவில் இந்த அப்டேட் அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. SHARE.

error: Content is protected !!