News June 26, 2024
பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக ஜெகனின் எம்பிக்கள்

இன்று மக்களவை சபாநாயகர் தேர்தல் நடைபெற உள்ளது. பாஜக தலைமையிலான NDA சார்பில் ஓம் பிர்லாவும், INDIA கூட்டணி சார்பில் கொடிகுன்னில் சுரேஷும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், ஆந்திரா முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் YSRCP கட்சியைச் சேர்ந்த 4 எம்பிக்கள் ஓம் பிர்லாவை ஆதரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. NDAவுக்கு ஏற்கனவே 293 எம்பிக்களின் ஆதரவு உள்ள நிலையில், தற்போது 297ஆக உயர்ந்துள்ளது.
Similar News
News March 3, 2026
10 MLA-க்களை பெற சீமான் சீரியஸான திட்டம்

கடந்த தேர்தலில் பதிவான வாக்குகளின் அடிப்படையில் காரைக்குடி உள்ளிட்ட 60 தொகுதிகளை சீமான் டிக் அடித்துள்ளாராம். அத்தொகுதிகளில் வீடு வீடாக பிரசாரம் செய்தால் வெற்றி பெறலாம் என்பதே அவரது இலக்கு என தகவல் வெளியாகியுள்ளது. அதிலும், ‘60 லட்சியம்; 10 நிச்சயம்’ என்ற கணக்கில் 10 MLA-க்களை நிச்சயம் இம்முறை பேரவைக்குள் அனுப்பிவிடலாம் என்ற நம்பிக்கையில் சீமான் உள்ளதாக கூறப்படுகிறது. நீங்க என்ன சொல்றீங்க?
News March 3, 2026
விவசாயிகளுக்கு இந்த அடையாள எண் அவசியம்!

ஆதார் கார்டு போல, அனைத்து விவசாயிகளும் ‘விவசாய அடையாள அட்டை’ வைத்திருக்க வேண்டும் என தமிழக விவசாயத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம், அரசின் மானியங்கள், பயிர்க் காப்பீடு & நேரடி நிதி உதவிகளை (DBT) ஊழலின்றி, நேரடியாக கிடைக்கும் என கூறப்படுகிறது. ஆதார் எண்ணை கொடுத்து, இந்த அடையாள எண்ணை பெற, <
News March 3, 2026
20 நாள்களில் கூடுதலாக ₹6,000 வழங்கிய தமிழக அரசு

நிதித் திட்டங்களில் பயன்பெறுவோருக்கு 20 நாள்களுக்குள் கூடுதலாக ₹6,000 வழங்கி தமிழக அரசு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. வழக்கம்போல் ₹1,000 உரிமைத் தொகையை எதிர்பார்த்த மகளிருக்கு பிப்.13 அன்று கூடுதலாக ₹4,000 சேர்த்து ₹5,000 வழங்கப்பட்டது. அதேபோல், இன்றைய தினம் மாற்றுத் திறனாளிகள், முதியோர், கைம்பெண் உதவித் தொகை பெறுவோருக்கு மேலும் ₹2,000 சிறப்பு நிதி வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


