News June 26, 2024
ஷாருக் கானுடன் ஜோடி சேரும் சமந்தா

நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோரைத் தொடர்ந்து சமந்தாவும் பாலிவுட்டில் கால் பதிக்கவுள்ளார்.
ஷாருக் கான் ஜோடியாக புதிய இந்தி படத்தில் நடிகை சமந்தா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேசபக்தியை பின்னணியாக கொண்ட கதையம்சத்தில் உருவாகவுள்ள இப்படத்தை, ராஜ்குமார் ஹிரானி இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆகஸ்டு மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News December 25, 2025
திருமண தடையை நீக்கும் வியாழக்கிழமை விரதம்!

தேவர்களுக்கே ஆசானான குருபகவானை வியாழக்கிழமை விரதமிருந்து வழிபட்டால் அளப்பரிய பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. தலைக்கு குளித்து மஞ்சள் நிற ஆடை அணிந்து, உணவு சாப்பிடாமல் கோயிலுக்கு சென்று நவகிரக சந்நிதியில் உள்ள குரு பகவானுக்கு சந்தனம், மஞ்சள், குங்குமப்பூ கலந்த பால் கொண்டு அபிஷேகம் செய்யவும். இதனால் திருமண தடை நீங்கும், தொழில் மற்றும் வியாபாரம் சிறந்து செல்வம் பெருகும் என கூறப்படுகிறது.
News December 25, 2025
விஜய்யிடம் போனில் பேசிய ராகுல் காந்தி

கரூர் துயரம் நடந்தபிறகு விஜய் மீது கொலைப்பழி சுமத்த சிலர் திட்டமிட்டனர். அப்போது விஜய்க்கு முதல் call வந்ததே ராகுல் காந்தியிடம் இருந்துதான் என ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார். ‘Brother, I am always with you’ என ராகுல், விஜய்யிடம் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே, காங்., நிர்வாகிகள் தவெகவினருடன் இணக்கம் காட்டுவது திமுக தலைமைக்கு நெருடலை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இது பேசுபொருளாகியுள்ளது.
News December 25, 2025
பொங்கல் பரிசுத்தொகை.. வந்தது இனிப்பான செய்தி

2021 தேர்தலின்போது, அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக அரசு, பொங்கல் பரிசாக ₹2,500 அளித்தது. இதை முறியடிக்கும் வகையில் ₹3,000 வழங்க திமுக அரசு திட்டமிட்டு, அதில் உறுதியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், பொங்கல் பரிசுத்தொகை பற்றி புத்தாண்டு தினத்தன்று CM ஸ்டாலின் அறிவிப்பார் எனவும், தொடர்ந்து ஜனவரி முதல் வாரத்தில் டோக்கன் விநியோகம் தொடங்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


