News June 25, 2024

அதானி பிறந்தநாளில் 24,500 யூனிட் ரத்தம் தானம்

image

அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானியின் 62வது பிறந்தநாளையொட்டி, பல்வேறு நலத்திட்டங்களை அதானி நிறுவனங்கள் முன்னெடுத்தன. அந்த வகையில், 73,500க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு உதவக்கூடிய ரத்ததான இயக்கத்தின் போது, சுமார் 24,500 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது. இது கிட்டத்தட்ட 9,800 லிட்டர் ஆகும். கடந்த ஆண்டு அதானி பிறந்தநாள் கொண்டாட்டத்தின் அங்கமாக 20,621 யூனிட் ரத்தம் தானமாக வழங்கப்பட்டது.

Similar News

News March 11, 2026

பச்சைத் துரோகம் செய்த இபிஎஸ்: ஐ.பெரியசாமி

image

மோடி அரசின் செயல்பாடு 100 நாள் வேலை திட்டத்தையே முற்றிலும் ஒழித்துக்கட்டும் முடிவில் இருப்பதையே காட்டுவதாக ஐ.பெரியசாமி விமர்சித்துள்ளார். கிராமப்புற மக்களின் வயிற்றில் அடிக்கும் புதிய சட்டத்தை ஆதரித்து EPS பச்சைத் துரோகம் செய்துவிட்டார் என சாடிய அவர், கிராமபுறத்தின் முதுகெலும்பை முறிக்கும் மோடி அரசின் வஞ்சகத்துக்கு துணைபோன EPS-க்கு மக்கள் வரும் தேர்தலில் பாடம் புகட்டுவார்கள் எனத் தெரிவித்தார்.

News March 11, 2026

பங்குச்சந்தைகள் மளமளவென சரிந்தது.. ₹8 லட்சம் கோடி LOSS!

image

LPG தட்டுப்பாடு விவகாரம் பங்குச்சந்தையிலும் எதிரொலித்துள்ளது. சென்செக்ஸ் 1,080 புள்ளிகள் சரிந்து 77,100 ஆகவும், நிஃப்டி 254 புள்ளிகள் சரிந்து 24,007 ஆகவும் மளமளவென குறைந்துள்ளது. இதனால், இன்று சுமார் ₹8 லட்சம் கோடிகளை முதலீட்டாளர்கள் இழந்துள்ளதாக பங்குச்சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதேநேரம், IOC, BPC, HPC உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களின் பங்குகள் 2% வரை அதிகரித்துள்ளது.

News March 11, 2026

ரோட்டில் இருந்த குழியால் நடந்த Medical Miracle… எப்புட்ரா!

image

மூளைச்சாவு அடைந்ததால் உயிர்பிழைப்பது கடினம் என டாக்டர்களால் கைவிடப்பட்ட பெண், மீண்டும் நலமுடன் வந்த சுவாரஸ்ய சம்பவம் உ.பி.யில் நிகழ்ந்துள்ளது. இறக்கும் தருவாயில் இருந்த வினிதா சுக்லாவை வீட்டிற்கு அழைத்து சென்றபோது, ரோட்டில் இருந்த ஒரு பள்ளத்தில் ஆம்புலன்ஸ் இறங்கி ஏறியிருக்கிறது. இந்த அதிர்வால் இதயத்துடிப்பு சீராகியுள்ளது. இந்த நிகழ்வு ஒரு Medical Miracle என டாக்டர்கள் கூறிவருகின்றனர்.

error: Content is protected !!