News June 25, 2024
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மற்றும் அதனை பயன்படுத்துவோர் குறித்து தகவல் அறிந்தால் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என இன்று (ஜூன்-25) கலெக்டர் க.கற்பகம் தெரிவித்தார். மாநில கட்டுப்பாட்டு அறைக்கான கட்டணமில்லா தொலைபேசி எண் 10581, மாவட்ட ஆட்சியர் தொடர்பு எண் 94441-75000 என்ற எண்ணிற்கோ, காவல் துறையினரின் Whatsapp No. 790413-6038 என்ற எண்ணை அழைக்கலாம்.
Similar News
News September 10, 2025
பெரம்பலூர்: B.E./B.Tech முடிச்சிட்டிங்களா? ரூ.50,000 சம்பளம்!

பெரம்பலூர் பட்டாதாரிகளே இந்த வாய்ப்பை Use பண்ணுங்க! Indian Oil Corporation Limited (IOCL) காலியாக உள்ள Graduate Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. B.E./B.Tech படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.50,000 – ரூ.1,60,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News September 10, 2025
பெரம்பலூரில் விஜய்? எப்போது தெரியுமா?

பெரம்பலூர் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வரும் செப்டம்பர் 13-ம் தேதி முதல் டிசம்பர் 20-ம் தேதி வரை தனது தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை மக்கள் சந்திப்பு இயக்கம் என்ற பெயரில் தொடங்க உள்ளார். அதன்படி வரும் செப்டம்பர் 13.09.2025 தேதி பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகை தந்து பொதுமக்களை சந்திக்க உள்ளார் என தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அதிகாரபூர்வமான தகவல் வெளியிடப்பட்டுள்ளது. SHARE IT
News September 10, 2025
பெரம்பலூர்: போட்டோகிராபி, எடிட்டிங் பயிற்சி

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கான போட்டோகிராபிங் மற்றும் எடிட்டிங் பயிற்சி நடைபெற உள்ளது. இதில் விருப்பமுள்ளவர்கள் www. tahdco.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு 04328 – 276317 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மிருனாளினி தெரிவித்துள்ளார்.