News June 25, 2024
Paris Olympics: இந்திய வில்வித்தை அணி பங்கேற்பு

பாரீஸ் ஒலிம்பிக்கில் வில்வித்தையில் (ரீகர்வ்) 2 தனிநபர், 2 அணி, ஒரு கலப்பு அணி என ஐந்து பிரிவுகளில் போட்டிகள் நடக்கவுள்ளன. அதற்கான தேர்வில் இந்திய அணி நேரடியாக தகுதி பெறவில்லை. இருப்பினும், தகுதி பெறாத அணிகளுக்கான தரவரிசை பட்டியலில், முதலிடம் பிடித்ததால் இந்திய அணி (ஆண்கள், பெண்கள் பிரிவுகள்) மறைமுகமாக தகுதி பெற்றது. தருண்தீப் ராய், தீபிகா குமாரி உள்ளிட்ட 6 வீரர்கள் தேர்வாகியுள்ளனர்.
Similar News
News March 3, 2026
காங்கிரஸ் கட்சியில் பிளவா? 13 MLA-க்கள் போர்க்கொடி

40 தொகுதிகளை காங்கிரஸ் கேட்கும் நிலையில் திமுகவோ 29 தொகுதிகளை கொடுக்க மட்டுமே ஆர்வம் காட்டுகிறது. இதனிடையே தவெகவுடன் காங்கிரஸ் நிர்வாகிகள் ஹைதராபாத்தில் வைத்து பேச்சு வார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. தவெகவுடன் காங்., பேச்சுவார்த்தை நடத்துவதை அறிந்து, 13 MLA-க்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். தவெகவுடன் கூட்டணி அமைத்தால் கட்சியில் இருந்து விலகுவோம் என எச்சரித்துள்ளனர்.
News March 3, 2026
முட்டை விலை மளமளவென குறைந்தது

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை மளமளவென சரிந்து வருகிறது. போர் பதற்றம் காரணமாக ஏற்றுமதி பாதிக்கப்பட்டு முட்டைகள் தேக்கம் அடைந்திருப்பதே விலை சரிவுக்கு காரணம். கடந்த 1 வாரத்தில் மட்டும் சுமார் 1 ரூபாய் வரை விலை குறைந்து ₹4.30-க்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதனால், சில்லறை விற்பனையிலும் முட்டை விலை கணிசமாக குறைந்துள்ளது. உங்க ஏரியாவில் 1 முட்டையின் விலை எவ்வளவு?
News March 3, 2026
EXCLUSIVE: சந்திர கிரகணம் போட்டோஸ்

இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று நிகழ்ந்தது. இந்தியாவில் பகல் பொழுதாக இருந்ததால் அதிக நேரம் பார்க்க முடியவில்லை. அதேநேரம் வெளிநாடுகளில் பிறை வடிவம், ரத்த வண்ணத்தில் காணப்பட்ட நிலவை மக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். அதனை ஆச்சரியத்துடன் போட்டோ எடுத்து தங்களது SM பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். அப்படியான போட்டோக்களை மேலே கொடுத்துள்ளோம். அதனை ஸ்வைப் செய்து பாருங்கள். SHARE IT


