News June 25, 2024

சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல்

image

சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி இன்று (ஜூன் 25) தெரிவித்திருப்பதாவது, மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து மாநில அளவிலான விருதுகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்கும் விருதாளர்கள் https://awards.tn.gov.in என்ற வலைத்தளத்தில் விவரங்களை பதிவு செய்து ஜூலை 5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Similar News

News March 3, 2026

சேலம்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (மார்.03) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

News March 3, 2026

ஆத்தூரில் திமுக பேனர் கிழித்ததால் பரபரப்பு

image

ஆத்தூர் ஒன்றியம் செல்லியம்பாளையத்தில், முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு வைக்கப்பட்டிருந்த பேனரை மர்ம நபர்கள் கிழித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் பத்திரம் மனோகரன் தரப்பில் வைக்கப்பட்ட இப்பேனர் சிதைக்கப்பட்டதைக் கண்டித்து, திமுக நிர்வாகிகள் ஆத்தூர் ஊரக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

News March 3, 2026

சேலம்: பட்டாவில் பெயர் திருத்தம் செய்யனுமா?

image

சேலம் மக்களே, பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!