News June 25, 2024
‘நான் நேதாஜி வழியில்…’ வைரலாகும் கமல் டயலாக்

கமல்ஹாசன், ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள ‘இந்தியன்-2’ படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் வைரலாகி வருகிறது. 2:38 நிமிடங்கள் ஓடக்கூடிய அந்த வீடியோவில், Anti-Indian போன்ற சமகால அரசியல் வசனங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, “நடப்பது இரண்டாவது சுதந்திரப் போராட்டம். ஊழலுக்கு எதிரான போரில் நீங்கள் காந்தி வழியில், நான் நேதாஜி வழியில்” என காந்தியவாதியான கமல் சொல்லும் டயலாக் பேசு பொருளாகியுள்ளது.
Similar News
News October 27, 2025
குறைந்த விலையில் அதிக புரோட்டீன்

நம் உடலின் வளர்ச்சிக்கும், தசைகளின் வலிமைக்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும், முக்கிய ஊட்டச்சத்தாக புரோட்டீன் உள்ளது. தினசரி உணவில் புரோட்டீன் சேர்த்தால் உடல் ஆரோக்கியமாகவும், சக்திவாய்ந்ததாகவும் இருக்கும். அதிக செலவு இல்லாமல், குறைந்த விலையில் புரோட்டீனை எளிதாக பெறலாம். எந்த உணவில், எவ்வளவு புரோட்டீன் உள்ளது, என்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க.
News October 27, 2025
வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டால் என்ன செய்வது?

2003 வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றவர்கள், SIR மேற்கொள்ளப்படும் போது எந்த ஆவணமும் சமர்பிக்க வேண்டியது இல்லை என ECI விளக்கம் அளித்துள்ளது. இறுதி <<18120268>>வாக்காளர் பட்டியலில்<<>>, வாக்காளர் பெயர் விடுபடுவது உள்ளிட்ட ஏதேனும் பிரச்னை இருந்தால் மாவட்ட கலெக்டரிடம் முதல் முறையீட்டை செய்யலாம். கலெக்டர் அதை நிராகரித்தால், மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் 2-வது முறையீட்டை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.
News October 27, 2025
இந்த அதிசய மனிதர்களை பற்றி தெரியுமா?

உங்களால் இசையை சுவைக்கவோ, ஒரு நிறத்தை குறிப்பிட்ட ஓசையாக கேட்கவோ முடியுமா? உலகத்தில் உள்ள 5% மக்களுக்கு இந்த சூப்பர் பவர் இருக்கு. இதை சினஸ்தீசியா என்கின்றனர். சாதாரண மனிதர்களுக்கு ஒரு இசையை கேட்கும்போது கேட்கும் திறன் மட்டுமே வேலை செய்யும். ஆனால் இவர்களுக்கு அனைத்து திறன்களுமே தூண்டிவிடப்படுவதால் இந்த அதிசயம் நிகழ்கிறது. டெஸ்லா, மர்லின் மன்றோ போன்றவர்களுக்கு சினஸ்தீசியா இருந்ததாக கூறப்படுகிறது.


