News June 25, 2024
M.R.விஜயபாஸ்கர் ஜாமின் மனு தள்ளுபடி

அதிமுக முன்னாள் அமைச்சர் M.R.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனுவை கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ₹100 கோடி மதிப்பிலான சொத்துகளை போலி ஆவணம் மூலம் அபகரித்த வழக்கில், தனது பெயர் சேர்க்கப்படலாம் என்று கருதி M.R.விஜயபாஸ்கர் முன் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அம்மனுவை விசாரித்த நீதிபதி சண்முகசுந்தரம், முன்ஜாமின் அளிக்க மறுத்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News March 16, 2026
ரஜினியிடம் ஆதவ் மன்னிப்பு கேட்கணும்: நயினார்

திமுக மிரட்டியதாலேயே ரஜினி அரசியலுக்கு வரவில்லை எனக் கூறிய ஆதவ் அர்ஜுனாவிற்கு, நயினார் கண்டனம் தெரிவித்துள்ளார். சிறந்த பண்பாளரான ரஜினி குறித்து ஆதவ் பொதுவெளியில் தவறாகப் பேசியது ஏற்புடையதல்ல என்று X தளத்தில் நயினார் பதிவிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், ரஜினி & அவரது ரசிகர்களிடம் ஆதவ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
News March 16, 2026
WOW.. 189 வருடங்களுக்கு பின் கண்டறியப்பட்ட செடி

அருணாச்சலப் பிரதேசத்தில் சுமார் 189 ஆண்டுகளுக்கு பிறகு மிகவும் அரிதான மூலிகை செடி ஒன்று மீண்டும் கண்டறியப்பட்டுள்ளது. Henckelia monophylla என்ற இச்செடியை சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாக யாரும் பார்க்கவில்லை. தற்போது, இது லோஹித் மாவட்டத்தில் தென்பட்டுள்ளதால் அம்மாநில மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில், இது மாநிலத்தின் பல்லுயிர் செழுமைக்கு எடுத்துக்காட்டு என அம்மாநில CM தெரிவித்துள்ளார்.
News March 16, 2026
இலவச கேஸ்.. மக்களை ஈர்க்க PNG நிறுவனங்களின் ஆஃபர்

LPG சிலிண்டருக்கான தட்டுப்பாட்டு அதிகரித்து வருவதால் PNG இணைப்புகளுக்கு மக்களை ஈர்க்க எரிவாயு விநியோக நிறுவனங்கள் அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளன. பதிவுக் கட்டண விலக்கு முதல் ₹500-க்கான இலவச எரிவாயு வரை பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. மார்ச் 31-ம் தேதிக்குள் புது இணைப்பு பெறுபவர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படும் என GAIL மற்றும் Indraprastha Gas நிறுவனங்கள் அறிவித்துள்ளன.


