News June 25, 2024
55 போலீசார் பணியிட மாற்றம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம், ராணிப்பேட்டை என 2 சப்-டிவிஷன்கள் உள்ளன. இதில் பணியாற்றி வரும் சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள், காவலர்கள் என மொத்தம் 55 பேரை பணியிட மாற்றம் செய்து ராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் கிரண்ஸ்ருதி இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். இவர்கள் பெரும்பாலானவர்கள் மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக வேறு ஸ்டேஷனிற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டவர்கள்.
Similar News
News November 1, 2025
ராணிப்பேட்டை: தேர்வு இல்லாமல் வங்கி வேலை

ராணிப்பேட்டை மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள் <
News November 1, 2025
ராணிப்பேட்டை – ஒரு பார்வை

ராணிப்பேட்டை, தமிழகத்தின் 36வது மாவட்டமாக 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி வேலூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது. தெற்கே திருவண்ணாமலை மாவட்டம், கிழக்கே காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் திருவள்ளூர் மாவட்டமும், மேற்கே வேலூர் மாவட்டம் மற்றும் வடக்கே ஆந்திராவும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. 2 வருவாய் கோட்டங்களும், 6 வருவாய் வட்டங்களும், 18 குறுவட்டங்களும், 330 வருவாய் கிராமங்களும் கொண்டுள்ளது.
News November 1, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (அக்-31) இரவு 10 மணி முதல் இன்று (நவ.1) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


