News June 25, 2024
‘மணிமேகலை’ விருது: கலெக்டர் அறிவிப்பு

நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் இன்று (ஜூன் 25) விடுத்துள்ள அறிக்கை: சிறப்பாக செயல்படும் சுய உதவி குழுக்கள், பகுதி கூட்டமைப்புகளுக்கு மணிமேகலை விருது வழங்கப்படுகிறது. எனவே தகுதி உள்ள குழுக்கள் நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகத்தில் ஜூலை 1ம் தேதி மாலை 5.30 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 9440 94 357 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News September 14, 2025
நெல்லை: 2 நாட்கள் குடிநீர் நிறுத்தம் – ஆணையர் அறிவிப்பு

நெல்லை மாநகராட்சி கமிஷனர் டாக்டர்.மோனிகா ராணா அறிவிப்பு: மேலப்பாளையம் மண்டலத்தின் சுத்தமல்லி நீரேற்று நிலையம் அருகில் 600 மி.மீ. பிரதான குழாய் உடைப்பால் நீர் இயக்கம் நிறுத்தப்பட்டு சரிசெய்யும் பணி நடக்கிறது. ஆகவே 40, 41, 42, 51, 53, 54, 55 வார்டுகளுக்கு இன்று மற்றும் நாளை அதாவது செப். 14, 15 ஆகிய நாட்களில் குடிநீர் விநியோகம் இருக்காது; பொதுமக்கள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்தவும். *ஷேர்
News September 14, 2025
நெல்லையில் 35 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் – ஆட்சியர்

நெல்லை மாவட்டத்தில் கார் பருவ நெல் அறுவடைத் தொடங்கிய விவசாயிகளுக்காக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் 35 நேரடி கொள்முதல் நிலையங்களை திறந்துள்ளது. அம்பை-12, சேரன்மாதேவி-12, பாளையங்கோட்டை-7, நாங்குநேரி-2, நெல்லை-1, மானூர்-1 என அமைந்துள்ளன. சன்னரக நெல் குவிண்டுக்கு ரூ.2,545 பொதுரகத்துக்கு ரூ.2,500 வழங்கப்படுகிறது. விவசாயிகள் நேரடியாக விற்று பயனடையலாம் என கலெக்டர் சுகுமார் தெரிவித்தார். *ஷேர்
News September 14, 2025
நெல்லை: இறந்த நிலையில் பெண் உடல்

பாளை -சீவலப்பேரி மெயின் ரோட்டில் கொம்பந்தானுர் ஊருக்கு மேல்புறம் இசக்கியம்மன் கோவில் அருகே சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் நேற்று இறந்து கிடந்தார். இதுக்குறித்து பாளை தாலுகா போலீசார் பெண் உடலை மீட்டு பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இறந்த பெண் கருப்பு நிறம் பூ போட்ட நைட்டி அணிந்திருந்தாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.