News June 25, 2024

பிரதமர் மோடியின் அடுத்த சுற்றுப்பயணம்

image

ரஷ்யாவும், இந்தியாவும் பொருளாதாரம் மற்றும் அரசியல் ரீதியாக ஆழ்ந்த நட்புறவை கொண்டுள்ளன. இதற்கிடையில், ரஷ்யாவுக்கு வருகை தரும்படி, மார்ச் மாதம் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தொடர்ந்து 3ஆவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள மோடி, அடுத்த மாதம் ரஷ்யாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் போருக்கு பிறகு, முதல்முறையாக மோடி ரஷ்யா செல்கிறார்.

Similar News

News March 8, 2026

பைனலில் வென்றால் எவ்வளவு பரிசு?

image

T20 WC தொடருக்காக ICC மொத்தம் ₹120 கோடி பரிசுத்தொகையை ஒதுக்கியுள்ளது. சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ₹27.48 கோடியும், 2-ம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹14.65 கோடியும் கிடைக்கும். அரையிறுதியில் தோல்வியடைந்த SA, ENG அணிகளுக்கு தலா ₹7.24 கோடியும், சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகளுக்கு ₹3.48 கோடியும், போட்டியில் பங்கேற்ற 20 அணிகளுக்கு தலா ₹2.29 கோடியும் கிடைக்கும்.

News March 8, 2026

₹8,000 வரை ஊதிய உயர்வு.. அரசின் இன்ப அதிர்ச்சி

image

ரேஷன் கடை ஊழியர்களுக்கு TN அரசு ஊதிய உயர்வு அளித்ததன் மூலம், புதிய பணியாளர்களுக்கு ₹2,000, சீனியர்களுக்கு ₹8,000 வரை கூடுதல் ஊதியம் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில், வரலாற்றிலேயே முதன்முறையாக ஊதிய உத்தரவுக்கான அறிவிப்பு மிக விரைவில் வெளியாகி இருப்பதாக அனைத்து ரேஷன் கடை ஊழியர் சங்க மாநில தலைவர் ராஜேந்திரன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அகவிலைப்படியை 58% ஆக உயர்த்துமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

News March 8, 2026

கண்களை பாதுகாக்க இதை செய்ய மறக்காதீர்

image

*அதிக நேரம் எதையும் உற்றுப் பார்க்காதீர்கள். கண்களை அடிக்கடி சிமிட்டுவது அவசியம். *குடல் சுத்தமாக இருந்தால் கண் பார்வையும் தெளிவாக இருக்கும். *இரு உள்ளங்கைகளால் இதமாக, மென்மையாக உங்கள் கண்களை தேய்க்கவும். லேசாக சூடு பரவும் வரை இவ்வாறு செய்த பிறகு, கண்களுக்கு ஓய்வளியுங்கள். *வெளிச்சம் குறைந்த இடங்களில் இப்படி பயிற்சி செய்வது நல்லது. SHARE IT

error: Content is protected !!