News June 25, 2024
விஜய், சீமான் கூட்டணியால் ஆட்சிக்கு வர முடியாது

விஜய், சீமான் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும், தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வர முடியாதென தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். விஜய் கட்சியும், சீமான் கட்சியும் கூட்டணி அமைக்கலாம் என கூறப்படுவது குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார். அப்போது, 2 கட்சிகளும் கூட்டணி அமைத்தால் 16-20% வாக்குகளே கிடைக்கும். அதன்மூலம் ஆட்சிக்கு வர முடியாது. திமுக கூட்டணியின் வாக்குகள் சிதறும் என்றார்.
Similar News
News March 4, 2026
காங்கிரஸுடன் கூட்டணி.. திமுகவினர் அதிருப்தியா?

திமுக-காங்., தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிக்கும் நிலையில், 2-வது நாளாக பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. 36 தொகுதிகள் + 2 ராஜ்யசபா சீட் என்ற கணக்கிற்கு இறங்கிவந்த காங்கிரஸிடம், 28 + 1 கொடுக்க தயார் என திமுக தலைமை கூறியுள்ளது. ஆனால், காங்., கொடுக்கும் அழுத்தத்திற்கு பணியக்கூடாது என்றும் 27+ 1 கொடுப்பதே அதீதம் என்று ஸ்டாலினிடம் திமுக நிர்வாகிகள் அதிருப்தியை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.
News March 4, 2026
₹5,083 கோடிக்கு ஒப்பந்தம்.. பலத்தை கூட்டும் இந்தியா

இந்திய கடலோர காவல்படை & கடற்படைக்கு ₹5,083 கோடிக்கு ஹெலிகாப்டர்கள், ஏவுகணைகள் கொள்முதல் செய்ய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. டெல்லியில் பாதுகாப்புத் துறை செயலாளர் ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. Make In India திட்டத்தில் இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸிடம் 6 Mk-III வகை ஹெலிகாப்டர்களும், ரஷ்ய நிறுவனத்திடம் இருந்து ஷெட்டில் ஏவுகணைகளும் வாங்கப்படுகின்றன.
News March 4, 2026
ஈரானின் உயர் தலைவரானார் கமேனியின் மகன்

போரில் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதையடுத்து, ஈரானின் புதிய உயர் தலைவராக முஜ்தபா கமேனி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதாக ஈரானிய ஊடகங்கள் கூறுகின்றன. இவர் கமேனியின் 2-வது மூத்த மகன் ஆவார். இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை கொடுத்த அழுத்தத்தினால், ஷியா மதகுருக்கள் இவரை தலைவராக தேர்ந்தெடுத்ததாக சொல்லப்படுகிறது. ஈரானில் பரம்பரை ஆட்சி முறை எதிர்க்கப்படும் நிலையில், முஜ்தபாவின் தேர்வு சர்ச்சையாகியுள்ளது.


