News June 25, 2024

திருச்சி முதல் பெங்களூர்.. வந்தே பாரத் சேவை!

image

திருச்சியிலிருந்து பெங்களூருக்கு ரயில் இயக்கப்பட வேண்டுமென ரயில் பயணிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்திருந்தனர். அந்த வகையில், பகல் நேரத்தில் திருச்சியில் இருந்து வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்பட உள்ளது. இது பயணிகளிடையே நல்ல வரவேற்பு பெறும் என்ற நம்பிக்கை ரயில்வேதுறைக்கு உள்ளது. தற்போது, மதுரையிலிருந்து திருச்சி வழியாக பெங்களூருக்கு வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

Similar News

News October 19, 2025

திருச்சி: 1000 போலீசார் பாதுகாப்பு!

image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்கள், கடை வீதிகள் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் அதிகம் கூட வாய்ப்பு உள்ளது. இதனை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் மட்டும் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக எஸ்.பி தெரிவித்துள்ளார். மேலும் திருச்சி மாவட்டத்தில் காவல் உதவி தேவைப்படும் மக்கள் 89391 46100 என்ற தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 19, 2025

திருச்சி: பாஜக நிர்வாகி மீது பெண் புகார்

image

பாஜக மாநில ஊடகப்பிரிவு பொதுச்செயலாளர் சிவகுமார் திருச்சி தில்லைநகரில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் மஞ்சுளா என்ற பெண் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் அந்நிறுவனத்தில் இருந்து 8 லட்சம் ரூபாய் அளவுக்கு பணம் காணாமல் போனதாக கூறப்படுகிறது. இதற்கு மஞ்சுளா தான் காரணம் என கூறி, சிவகுமார் தன்னை அடித்து துன்புறுத்தியதாக மஞ்சுளா நேற்று திருச்சி கமிஷனர் அலுவலகத்தில் புகாரளித்தார்.

News October 19, 2025

திருட்டு வழக்கில் மீட்கப்பட்ட பொருட்கள் ஒப்படைப்பு

image

திருச்சி மாவட்ட காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வாகனங்கள், மொபைல் போன்கள் திருடு தொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில், போலீசார் தீவிர நடவடிக்கைகளின் அடிப்படையில் வாகனங்கள், திருடு போன 37 பவுன் தங்க நகைகள், மொபைல் போன்கள் கைப்பற்றப்பட்டு இன்று அந்தந்த உரிமையாளர்களிடம் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் வழங்கினார்.

error: Content is protected !!