News June 25, 2024

திருப்பத்தூருக்கு 1250 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் வருகை

image

திருவாரூரில் இருந்து காட்பாடிக்கு 1,250 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் இன்று (ஜூன் 25) ரயிலில் வந்தடைந்தது. காட்பாடியிலிருந்து லாரிகள் மூலம் பாகாயம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்குக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கிருந்து லாரிகள் மூலம் வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்படும் என்று பொது விநியோகத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News

News January 19, 2026

வேலூர்: செவிலியர் துறையில் 999 காலிஇடங்கள் Apply Now!

image

தமிழ்நாடு சுகாதார துறையில், செவிலியர் உதவியாளர் (தரம்-2) 999 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th & Nursing Assistants Course முடித்திருந்தால் போதும். மாத சம்பளம் ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் பிப்.08-க்குள் <>இங்கு க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். சூப்பர் வாய்ப்பு! உங்கள் நண்பருக்கு ஷேர் பண்ணுங்க.

News January 19, 2026

BREAKING: வேலூர் பள்ளி மதிய உணவில் பல்லியா?

image

வேலூர் மாவட்டம், அரசு உதவி பெறும் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மதிய உணவில் பல்லி இருந்ததாக மாணவர்கள் குற்றம்சாட்டியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பின்னர் மாணவர்களுக்குப் பரிமாறப்பட்ட உணவின் மாதிரியை அதிகாரிகள் ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.

News January 19, 2026

வேலூர் ஒழுங்குமுறை கூட விற்பனை நிலவரம்

image

வேலூர் டோல்கேட் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நெல் மூட்டைகளின் இன்றைய (ஜன.19) விலை நிலவரம் வெளியாகி உள்ளது. இதில் 75 கிலோ நெல் மூட்டைகள் ரூ.1,550 – 2,060 வரையும், மகேந்திரா 606 ரகம் ரூ.1,451 முதல் 1,989, நர்மதா ரூ.1,090 – 2,050 வரையும், மணிலா (80 கிலோ) ரூ.8,020 முதல் 10,289,  கொப்பரை தேங்காய் ஒரு கிலோ 123 முதல் 180 ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!