News June 25, 2024
ஜூன் 28 முதல் 30 வரை சிறப்பு பேருந்துகள்

வார விடுமுறையை முன்னிட்டு, ஜூன் 28 முதல் 30 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. கிளாம்பாக்கத்தில் இருந்து தி.மலை, சேலம் மதுரை உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கும், கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, பெங்களூருவுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும், www.tnstc.in, மொபைல் செயலி மூலம் பொதுமக்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.
Similar News
News March 12, 2026
திமுகவின் பகல் கனவு பலிக்காது: GK வாசன்

தேர்தலுக்கு முன்பே NDA வெற்றி கூட்டணியாக உலா வந்து கொண்டிருக்கிறது என GK வாசன் கூறியுள்ளார். திருச்சியில் பேசிய அவர், திமுக மீதான PM-ன் குற்றச்சாட்டுகள் மக்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது என்றார். வாக்குறுதியை நிறைவேற்றாத, சட்ட ஒழுங்கை சீர்குலைத்த திமுகவிற்கு எதிராக எதிர்மறை வாக்குகள் அதிகரித்து வருகிறது என்றும், மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்ற திமுகவின் பகல் கனவு பலிக்காது எனவும் தெரிவித்தார்.
News March 12, 2026
SPORTS 360°: இந்தியா அபார வெற்றி

*மகளிர் ஹாக்கி WC குவாலிஃபையர்ஸில், இந்தியா 4-1 என்ற கோல் கணக்கில் வேல்ஸை வீழ்த்தி உலகக் கோப்பைக்கு தகுதி *சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர், முதல் சுற்றில் கிரண் ஜார்ஜ் 23-21, 21-19 செட் கணக்கில் சிங்கப்பூர் வீரரை வீழ்த்தினார் *கலப்பு இரட்டையர் முதல் சுற்றில் துருவ்-தணிஷா இணை வெற்றி *பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ODI-ல் 8 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசம் வெற்றி
News March 12, 2026
அடுத்த டார்கெட் கூகுள், மைக்ரோசாப்ட் தான்: ஈரான்

தங்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களின் அலுவலகங்கள் தாக்கப்படும் என ஈரான் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன் பட்டியலில் பட்டியலில், கூகுள், மைக்ரோசாஃப்ட், IBM போன்ற நிறுவனங்கள் இருப்பதாக தஸ்னிஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில், வளைகுடா நாடுகளில் உள்ள US நிறுவனங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.


