News June 25, 2024

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் உமா அவர்கள் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் நாணயங்கள் செல்லாது என மக்கள் மத்தியில் பரவலாக எண்ணம் உள்ளது. ரிசர்வ் வங்கி பல்வேறு விளக்கங்கள் அளித்தும் நாணயங்கள் வாங்க மறுக்கப்பட்டு வருகிறது. இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நாணயங்களை பொதுமக்கள் வாங்கி பயன்படுத்த வேண்டும்.

Similar News

News August 22, 2025

நாமக்கல்: ஆன்லைனில் பட்டா பெறுவது எப்படி ?

image

புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், <>eservices.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்ற ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு நீங்கள் விண்ணப்பிக்கலம். SHARE பண்ணுங்க!

News August 22, 2025

நாமக்கல்: ஒரே இடத்தில் அனைத்திற்கும் தீர்வு!

image

நாமக்கல் மாவட்டத்தில் நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்:
♦️நாமக்கல், நகராட்சி நடுநிலைப்பள்ளி கொண்டுசெட்டிபட்டி.
♦️வெங்கரை, சமுதாயகூடம் வெங்கரை.
♦️ஆர்.புதுப்பட்டி, அரசு உயர்நிலைப்பள்ளி ஆர்.புதுப்பட்டி.
♦️பள்ளிபாளையம், அரசினர் மேல்நிலைப்பள்ளி, குள்ளநயக்கன்பாளையம்.
♦️புதுச்சத்திரம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கரைக்குறிச்சி.
♦️சேந்தமங்கலம், KPS திருமணமஹால் அக்கியம்பட்டி. SHARE பண்ணுங்க மக்களே.!

News August 22, 2025

நாமக்கல் அருகே சாலை விபத்தில் மூவர் உயிரிழப்பு!

image

ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் சாமி கும்பிட்டு விட்டு ஒரு வேனில் மீண்டும் சேலம் நோக்கி மோகன், சுசீலா, கமலம், சுகுமார், புவனேஸ்வரி ஆகிய ஐவர் இன்று குமாரபாளையம் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது நின்றுகொண்டிருந்த ஈச்சர் வாகனத்தின் பின்புற பகுதியில் மோதியதில், ஆம்னி வேன் ஓட்டிய சுகுமார், மோகன், கமலம் ஆகியோர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். புவனேஸ்வரி, சுசிலா ஆகியோர் படுகாயமடைந்தனர்.

error: Content is protected !!