News June 25, 2024

தனக்கு தானே சம்பள உயர்வு கொடுத்த HRக்கு சிறை

image

சிங்கப்பூரில் தனக்கு தானே சம்பள உயர்வு வழங்கிக் கொண்ட HR ஊழியரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 2017ஆம் ஆண்டு நிறுவனத்தில் சேர்ந்த டான் லீ என்ற பெண், 2.5 ஆண்டுகளில் தனது சம்பளத்தை $148,000 (₹1.23 கோடி) வரை உயர்த்தியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், குற்றம்சாட்டப்பட்ட நபர் நிறுவனத்தின் கஜானாவை தனது வீட்டு உண்டியல் போல பயன்படுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Similar News

News March 16, 2026

கூட்டணி குறித்து தவெக அதிகாரப்பூர்வ அறிவிப்பு

image

80 தொகுதிகள், துணை முதல்வர் பதவி என்ற ஆஃபருடன் அதிமுக கூட்டணியில் தவெகவை இணைக்க பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தகவல் வெளியானது. இந்நிலையில், பாஜக, அதிமுக, சசிகலா, ராமதாஸுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக வெளியாகும் தகவல்கள் வதந்தி என்று தவெக தரப்பில் அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளது. மேலும், யாருடனும் கூட்டணி குறித்து பேசவில்லை, வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது.

News March 16, 2026

மாதம் ₹85,000.. கணவரை வாடகைக்கு விட்ட மனைவி!

image

10 ஆண்டு திருமணம், மகன்(8) இருக்கும் நிலையில், தாய்லாந்து பெண் ஒருவர், தன் கணவர் திருமணம் மீறிய உறவில் இருப்பதை கண்டறிந்துள்ளார். தங்களால் பிரிந்து வாழ முடியாது என காதல் ஜோடி மறுத்த போது, மனைவிக்கு நூதன யோசனை உதித்துள்ளது. கணவன் அந்த உறவில் தொடர மாதம் ₹85,000 Demand செய்துள்ளார். இந்த ஆஃபரை இருவரும் ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது. தற்போது செய்தி வெளியாக, பலரும் ஆச்சரியத்தில் வாயை பிளந்துள்ளனர்.

News March 16, 2026

புதுச்சேரி வேட்பாளர்களை இறுதி செய்யும் விஜய்

image

தவெக சார்பில் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை, விஜய் இன்று இறுதி செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரியில் ஏப்ரல் 9-ம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், இன்று முதல் 23-ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யப்படுகிறது. அங்கு போட்டியிட ஆர்வமாக இருக்கும் வேட்பாளர்களிடம், விஜய் இன்னும் சற்றுநேரத்தில் நேர்காணல் நடத்துகிறார்.

error: Content is protected !!