News June 25, 2024
அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி இன்று இரவு 7 மணி வரை கன்னியாகுமரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News January 12, 2026
BREAKING: குமரி எக்ஸ்பிரஸ் ரயிலுக்குள் இருந்த சடலம்

பெங்களூரில் இருந்து கன்னியாகுமரிக்கு எக்ஸ்பிரஸ் ரயில் இன்று மதியம் வந்தது. ரயிலில் இருந்து அனைவரும் இறங்கி சென்ற நிலையில் ரயில் பெட்டிகளை ரயில்வே போலீசார் சோதனை செய்த நிலையில் ரயில் பெட்டி ஒன்றில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில் இருக்கையின் அடியில் படுத்து கிடந்துள்ளார். ரயில்வே போலீசார் அவரது உடலை மீட்டு யார் எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரித்து வருகின்றனர்.
News January 12, 2026
சுற்றுச்சூழலை பாதிக்கும் டயர்களை எரிக்க வேண்டாம்

பொங்கலின் முந்தைய நாளான போகிப் பண்டிகையின் போது பழைய பொருட்களை எரிப்பது வழக்கம். குமரியில் போகிப் பண்டிகை கொண்டாடப்படுவதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படும் வகையில் உள்ள டயர் போன்ற பொருட்களை எரிக்க வேண்டாம். மேலும், சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் போகிப் பண்டிகை கொண்டாட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அழகு மீனா அறிவுறுத்தியுள்ளார்.
News January 12, 2026
குமரி: வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது இனி ஈஸி!

குமரி மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். <


