News June 25, 2024

அதிமுக எம்எல்ஏக்களுக்கு இபிஎஸ் அறிவுரை?

image

கள்ளக்குறிச்சி விஷச்சாராய பலி சம்பவத்தால் திமுக கடும் அதிர்ச்சியில் உள்ளது. ஆனால் முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக, இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள விரும்புவதாக சொல்லப்படுகிறது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் இபிஎஸ், எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பேசுகையில், தொகுதி பிரச்னைக்கு முக்கியத்துவம் அளிக்கும்படியும், விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க சாத்தியக்கூறு தெரிவதாகவும் சொன்னதாக கூறப்படுகிறது.

Similar News

News March 6, 2026

சஞ்சு சாதனை… ஆர்ச்சர் வேதனை!

image

இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 WC அரையிறுதி போட்டியில் இந்தியாவின் சஞ்சு சாம்சன் 89 ரன்கள் குவித்தார். அதில் 7 சிக்சர்களும் அடங்கும். இதன்மூலம் டி20 WC வரலாற்றில் அதிக சிக்சர்கள்(16) அடித்த வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். அதேசமயம், டி20 WC நாக் அவுட் போட்டியில் 50+ ரன்களை வாரி வழங்கிய பவுலர் எனும் மோசமான சாதனையை இங்கிலாந்தின் ஆர்ச்சர் (61 ரன்கள்) படைத்துள்ளார்.

News March 5, 2026

ராசி பலன்கள் (06.03.2026)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

News March 5, 2026

லோனில் பைக் / கார் வாங்குபவர்களுக்கு நற்செய்தி!

image

லோனில் பைக் அல்லது கார் வாங்கும்போது, RC புக்கில் கடன் கொடுத்த வங்கி/ நிதி நிறுவத்தின் பெயர் இருக்கும். லோன் கட்டி முடித்த பின்னரே இதை மாற்ற முடியும். இதற்கு நீங்கள் வங்கிக்கும், RTO-க்கும் அலைய வேண்டிய நிலை இருந்தது. இனி அதற்கு அவசியமில்லை. லோன் செலுத்தி முடித்த உடனே, ஆன்லைனில் தானாகவே RC-ல் அப்டேட் செய்யப்படும். இது தற்போது சோதனை முறையில் உள்ளது. விரைவில் விரிவுப்படுத்தப்படும்.

error: Content is protected !!