News June 25, 2024

இரவு 7 மணி வரை இடியுடன் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இரவு 7 மணி வரை 11 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. குமரி, நெல்லை, தென்காசி, தேனி, திருப்பூர், கோவை, நீலகிரி, திண்டுக்கல், விருதுநகர், திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும். எனவே, வெளியே செல்வோர் குடை, ரெயின் கோட் போன்றவற்றை எடுத்துச் செல்லவும்.

Similar News

News March 7, 2026

தமிழக அரசியலில் வியப்பான நகைப்பு: H.ராஜா

image

மனைவிக்கு உண்மையாக இல்லாத நபர், குற்ற உணர்ச்சி சிறிதும் இன்றி மகளிர் தின வாழ்த்து கூறுவதாக H.ராஜா விமர்சித்துள்ளார். இப்படிப்பட்டவர்கள் தன்னை பெண்ணினத்தின் பாதுகாவலராக அடையாளம் காட்டிக் கொள்வது தமிழக அரசியலில் பார்க்க முடிந்த வியப்பான நகைப்பு என்றும் விமர்சித்துள்ள அவர், மனைவி, குழந்தைகளுக்கு துரோகம் இழைத்துவிட்டு, அதே நபர் மேடைகளில் பெண்ணுரிமை குறித்து பேசுவதாக சாடியுள்ளார். யாரை சொல்கிறார்?

News March 7, 2026

கச்சா எண்ணெய் விவகாரம்.. US-க்கு இந்தியா கொடுத்த பதில்

image

ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா விதித்த 30 நாள் காலக்கெடுவை நிராகரித்த இந்தியா, அதற்குத் தகுந்த பதிலடி கொடுத்துள்ளது. தங்களுக்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை என்றும், தேசத்தின் நலனே முக்கியம் எனவும் மத்திய அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது. ஹோர்முஸ் ஜலசந்தியில் நிலவும் பதற்றம் காரணமாக, கச்சா எண்ணெய் எங்கு மலிவாக கிடைக்கிறதோ அங்கு வாங்குவோம் என்றும் தெரிவித்துள்ளது.

News March 7, 2026

TN தேர்தல் தேதி.. வெளியானது ALERT

image

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வரும் மே 10-ம் தேதி நடைபெறும் என்று கூறப்படும் தகவல் உண்மையல்ல என்று அரசின் TN Fact Check தெரிவித்துள்ளது. தற்போதைய தமிழக அரசின் பதவிக்காலம் மே 10-ம் தேதி முடிவடையும் என்று ECI அறிவித்துள்ளது. ஆனால், தேர்தல் தேதி குறித்து அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை என்றும், இந்த தவறான தகவலை நம்ப வேண்டாமெனவும் TN Fact Check விளக்கம் அளித்துள்ளது.

error: Content is protected !!