News June 25, 2024

ஆஸி., அணியின் அஸ்திவாரம் டேவிட் வார்னர்(2)

image

சர்வதேச T20 கிரிக்கெட்டில், இதுவரை 99 போட்டிகளில் விளையாடியுள்ள வார்னர், மொத்தம் 2,894 ரன்களை குவித்துள்ளார். இதில் ஒரு சதம், 24 அரை சதம் அடங்கும். இதேபோல, ஐபிஎல்லில் பல்வேறு அணிகளுக்காக விளையாடிய வார்னர், 176 போட்டிகளில் பங்கேற்று 6,397 ரன்கள் குவித்துள்ளார். இதில் 4 சதம், 61 அரை சதங்கள் அடங்கும். மேலும் SRH அணிக்காக விளையாடிய அவர், ஐபிஎல் கோப்பையை அந்த அணிக்காக பெற்றுத்தந்தார்.

Similar News

News March 13, 2026

தமிழக தேர்தல் தேதி.. சற்றுமுன் வெளியான தகவல்

image

வரும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 15) தமிழகத்திற்கான தேர்தல் தேதியை ECI அறிவிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் 14-ல், கொல்கத்தாவில் நடைபெறும் பாஜகவின் ‘பரிவர்த்தன் யாத்திரையின்’ நிறைவு பொதுக்கூட்டத்தில் PM மோடி பேசுகிறார். இதன்பிறகே தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. ஏப்ரல் 2-வது (அ) 3-வது வாரத்தில் ஒரே கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் என்றும் ECI வட்டாரங்கள் கூறுகின்றன.

News March 13, 2026

போட்டிப்போட்டு பரிசுகளை வாரி வழங்கும் திமுக, அதிமுக

image

தேர்தல் தேதி அறிவித்துவிட்டால், உடனே நடத்தை விதி அமலுக்கு வந்துவிடும். அதன்பின் வாக்காளர்களுக்கு பரிசுப்பொருள்களை கொடுக்க முடியாது. இதனால், முன்கூட்டியே கோவை மக்களுக்கு திமுகவும், அதிமுகவும் பரிசுப் பொருள்களை வாரி வழங்குகின்றனவாம். திமுக சார்பில் பூத் வாரியாக வீட்டுக்கு ஒரு சில்வர் அண்டா வழங்க, அதற்கு போட்டியாக அதிமுகவும் மிகப்பெரிய பரிசுப் பொருள்களை கொடுக்கிறதாம்.

News March 13, 2026

ஈரான் போர்: 4-வது விமானத்தை இழந்த அமெரிக்கா

image

ஈராக்கில் அமெரிக்காவின் KC-135 வான்வழி எரிபொருள் நிரப்பும் விமானம் விபத்துக்குள்ளானது. அதில் இருந்த 6 பணியாளர்களை தேடும் பணி தொடர்வதாகவும், இந்த விபத்து எதிரிகளின் தாக்குதலால் அல்ல எனவும் அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது. 2 விமானங்கள் மோதியதில் ஒன்று விபத்துக்குள்ளாக, மற்றொன்று பாதுகாப்பாக தரையிறங்கியதாக கூறப்படுகிறது. இதற்குமுன் குவைத்தில் 3 போர் விமானங்களை அமெரிக்கா இழந்தது.

error: Content is protected !!