News June 25, 2024
நெல்லை எம்.பி ராபர்ட் ப்ரூஸ் பதவியேற்பு

18 ஆவது மக்களவைத் தேர்தலில், நெல்லை தொகுதியில் போட்டியிட்டு வென்ற திமுக கூட்டணியின் காங். வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் இன்று எம்பியாக பதவி ஏற்றுக்கொண்டார். நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில், தற்காலிக மக்களவைத் தலைவர் மஹதாப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். குமரியை சேர்ந்த வழக்கறிஞரான இவர், மாவட்ட காங்கிரசில் பல்வேறு பதவிகளில் இருந்துள்ளார். தற்போது முதல் முறையாக எம்பியாகி உள்ளார்.
Similar News
News March 2, 2026
நெல்லை ரயில் பயணிகள் கவனத்திற்கு! முக்கிய மாற்றம்..

மதுரை கோட்ட ரயில்வே பகுதியில் பராமரிப்பு பணிகள் காரணமாக நெல்லை வழியாக செல்லும் ஈரோடு -செங்கோட்டை விரைவு ரயில் 3 10 17 மற்றும் 24 தேதிகளை தவிர மற்ற நாட்களில் திண்டுக்கல்- மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. நாகர்கோவில்-நெல்லை -மும்பை விரைவு ரயில் 5, 8, 12, 15, 19, 22, 26, 29 ஆகிய தேதிகளில் மானாமதுரை காரைக்குடி வழியாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 2, 2026
நெல்லை: ரயிலில் தவறி விழுந்தவர் பரிதாப பலி

குமரியை சேர்ந்த டார்லிங் ஜோஷ் (37) கடந்த 23ம் தேதி சென்னை – குமரி ரயிலில் பயணம் செய்துள்ளார். இந்த ரயில் நெல்லை சந்திப்புக்கு வந்தபோது அவருடைய பை மட்டும் இருந்துள்ளது. உடனே அவரை தேடிய ரயில்வே போலீசார் அவர் மயங்கிய நிலையில் தூத்துக்குடி மணியாச்சி ரயில்பாதை அருகே கிடந்ததை கண்டு அவரை மீட்டு நெல்லை G.H-க்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
News March 2, 2026
நெல்லை இரவு காவல் பணி அதிகாரிகள் விவரம்

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் உத்தரவின்படி இன்று மார்ச் 1ம் தேதி இரவு முதல் நாளை காலை 6 மணி வரை நெல்லை மாநகரப் பகுதியில் போலீஸ் சரகம் வாரியாக காவல் பணியில் இருக்கும் அதிகாரிகள் விபரத்தை மாநகர காவல் துறை இன்று இரவு வெளியிட்டுள்ளது. அவரது கைபேசி எண் விபரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. காவல் உதவிக்கு இவர்களை தொடர்பு கொள்ளலாம்.


