News June 25, 2024
புதுக்கோட்டை மாவட்ட எம்.பி-கள் இன்று பதவியேற்பு

புதுக்கோட்டை மாவட்ட வெற்றி வேட்பாளர்களான காங்கிரஸ் கட்சியின் கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி ,மதிமுக கட்சியை சேர்ந்த துரை வைகோ, இந்திய முஸ்லீக் கட்சி நவாஸ் கனி ,ஆகியோர் இன்று நாடாளுமன்ற எம்.பி-களாக பதவி ஏற்றுக்கொண்டார். நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில், தற்காலிக மக்களவைத் தலைவர் மஹதாப் இவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
Similar News
News October 19, 2025
புதுகை: பேருந்து சக்கரத்தில் சிக்கி பரிதாப பலி

புதுகையிலிருந்து பெருங்களூர் நோக்கி நேற்று மாலை அரசு டவுன் பஸ் ஒன்று சென்றது. அப்போது பஸ்சின் முன்பக்க சக்கரத்தில் அடையாளம் வாலிபர் ஒருவர் திடீரென விழுந்ததில் அவரது உடல் மீது பஸ் ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கணேஷ்நகர் போலீசார் இறந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
News October 19, 2025
புதுகை: குளத்தில் மூழ்கி பரிதாப பலி

அன்னவாசல் அருகே முதலிப்பட்டியை சேர்ந்தவர் சக்திவேல், கூலி தொழிலாளியான இவர் இன்று மாங்குடி குவாரியில் உள்ள குளத்தில் குளிக்க சென்றபோது எதிர் பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி பலியானார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த சிப்காட் தீயணைப்புத் துறையினர் சக்திவேலின் உடலை மீட்டனர். தொடர்ந்து இதுகுறித்து அன்னவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர
News October 19, 2025
புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (அக்.18) இரவு 10 மணி முதல் இன்று (அக்.19) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!