News June 25, 2024
துணை சபாநாயகர் பதவி எதிர்க்கட்சிகளின் உரிமை

மக்களவை துணை சபாநாயகர் பதவி தங்களுக்கு அளிக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. மத்திய பாஜக அரசு உடன்படாததால், சபாநாயகர் தேர்தலில் காங்கிரஸ் எம்பி கொடிகுன்னில் சுரேஷ் போட்டியிடுகிறார். இதுகுறித்து பேசிய அவர், சபாநாயகர் பதவி ஆளும்கட்சிக்கானது போல, துணை சபாநாயகர் பதவி எதிர்க்கட்சிகளின் உரிமை, அந்தப் பதவி தராததால், தான் போட்டியிடுவதாகவும் குறிப்பிட்டார்.
Similar News
News September 17, 2025
BREAKING: இபிஎஸ் வீட்டில் பரபரப்பு

சென்னையில் உள்ள EPS வீட்டில் இரவில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. அதற்கு காரணம், அவரது வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதுதான். DGP அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் இ-மெயில் அனுப்பியதன் அடிப்படையில், மோப்பநாய் உதவியுடன் போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். இறுதியில், அது புரளி என தெரிய வந்தது. கவர்னர் மாளிகை, நடிகர் எஸ்.வி.சேகர் வீட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
News September 17, 2025
GST-ல் மாற்றத்தால் மக்களிடம் பணம் புரளும்: FM

GST வரி விதிப்பில் செய்துள்ள மாற்றங்களால் மக்களின் கைகளில் பணம் புரளும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். GST சீர்திருத்தங்கள் இந்திய பொருளாதாரத்தை ₹2 லட்சம் கோடி வரை மேலும் உயர்த்தும் என்றும், இதனால் சாமானியர்களுக்கு அதிக பணம் மிச்சமாகும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் UPA அரசாங்கம் வரி பயங்கரவாதத்தை ஊக்குவித்ததாகவும், ஒரே நாடு ஒரே வரி முறையை செயல்படுத்த தவறியதாகவும் FM குற்றஞ்சாட்டினார்.
News September 17, 2025
ரஜினி கமலை இயக்கும் இயக்குநர் இவரா?

தானும், கமலும் சேர்ந்து நடிக்கும் படத்திற்கு இயக்குநரும், கதையும் இன்னும் அமையவில்லை என்று அப்டேட் கொடுத்திருந்தார் ரஜினிகாந்த். இதனால், இந்த லிஸ்ட்டில் லோகேஷ் இல்லை என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. எனவே, யார் இந்த படத்தை சரியான கதையுடன் இயக்குவார் என்ற கேள்வி இணையத்தில் உலாவுகிறது. இந்நிலையில், இந்த படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த காம்போ ஓகேவா?