News June 25, 2024
வேலூர் எம்.பி கதிர் ஆனந்த் பதவியேற்பு

வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் இன்று நாடாளுமன்ற எம்.பி-யாக பதவி ஏற்றுக்கொண்டார். நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில், தற்காலிக மக்களவைத் தலைவர் மஹதாப் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
Similar News
News March 11, 2026
தமிழகக் கல்வித் திட்டம் நிராகரிப்பா? – கதிர் ஆனந்த் கேள்வி

தமிழகத்தில் புதிய தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி & ஆராய்ச்சி மையம் (NITTTR) அமைக்கக் கோரி வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினார். இதற்குப் பதிலளித்த மத்திய அமைச்சர் சுகந்தா மஜும்தார், சென்னையில் ஏற்கனவே மையம் இருப்பதால் புதிய மையம் தேவையில்லை எனத் தெரிவித்தார். மாநிலத்தின் வளர்ச்சிக்கான இக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
News March 11, 2026
வேலூர்: மருமகளால் தப்பிய ‘மாபெரும்’ நஷ்டம்!

குடியாத்தம் வினாயகபுரம் பகுதியில் ரியல் எஸ்டேட் அதிபர் சேட்டு என்பவரது வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள், 8 பவுன் தங்க நகைகளைத் திருடினர். அவர் மாடியில் உறங்கியபோது இச்சம்பவம் நடந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக, மருமகள் வெளியூர் சென்றபோது அணிந்து சென்றதால் பெரும் நகைகள் தப்பின. மோப்ப நாய் டோரா மற்றும் தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் குடியாத்தம் டவுன் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
News March 11, 2026
வேலூர் மாவட்ட காவல்துறை ரோந்து பணி விவரம்

வேலூர் மாவட்டத்தில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


